part =25

57 2 0
                                    

         செண்பா வீட்டில் அவளது மொத்த குடும்பமும் அமர்ந்திருந்தது. அவளது தந்தை மிகவும் கவலையுடன் காணப்பட்டார். அவளது  தாயோ  அழுது சோர்ந்து போயிருந்தார்.

மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்திற்கு பேரிடியாக வந்தது அந்த திடீர் சம்பவம்.

எப்பொழுதும் சிரித்த முகமாக மங்களகரமாக இருக்கும் அக்கா இன்று களை இழந்து இருப்பதைக் கண்டு தம்பிகள் நிலை குலைந்து போயினர்..

ஏன் ப்பா.. பேசாம  கொஞ்ச நாள் நம்ப  பாப்பா..வ காலேஜ், வேலை இது  எல்லாத்துல இருந்தும் லீவு போட சொல்லி வீட்டிலயே வெச்சிக்கலாமா..!? என்று செண்பாவின் சித்தப்பா கூற.

என்ன? மாமா நீங்க.. கொசுவுக்கு பயந்து கோட்டை விட்டு போக சொல்றீங்களே.. ஒருத்தனுக்காக நம்ம பாப்பா ஏன் வீட்டோட இருக்கணும்.

அவ என்ன தப்பு பண்ணா வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்க.. வீடு வாசல் விட்டா வேற எதுவுமே தெரியாம கூண்டுக்கிளி மாதிரி இருந்தவ  இப்பதான் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தி சந்தோஷமா இருக்கா  திருப்பி அவள வீட்டோட அடைச்சு
வைக்க  பாக்கறீங்க....

அது இல்ல மாப்ள.. எப்போ என்ன நடக்கும்னு பயந்துட்டு இருக்க  வேண்டியதா  இருக்கே.

அதுக்கு என்ன செய்ய முடியுமோ நாம செய்யலாம்.. நம்ம தான் இத்தனை பேர் இருக்கோமே.. இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்கிற வரைக்கும் நாம எப்பவும் துணைக்கு கூடவே போகலாம்.

அண்ணன் சொல்றது சரி.. நம்ம யாருக்கும் எந்த துரோகமும் செய்யல.. நம்ம வீட்டு பிள்ளைக்கும் எதுவும் நடக்காது. நாம நடக்கவும் விட மாட்டோம்.

சீக்கிரமே அம்முக்கு நல்ல வரன் பார்த்து கல்யாணம் முடிக்கலாம்.
அதுக்கப்புறம் எல்லாம் தன்னாலே சரி ஆயிடும்.

செண்பாவின் அம்மா.. ஆண்டவா உன் கிட்ட ஒப்படைக்கிறேன் அவளை நல்ல கரையில சேர்த்துடு. எனக்கு வேற எதுவும் வேண்டாம். என்று ஆண்டவனை கண்ணீர் மல்க வேண்டினார்.. தம்பி தங்கைகள் அனைவரும் அக்காவுக்கு ஆறுதல் கூறினர்.

தவமின்றி கிடைத்த வரமேWhere stories live. Discover now