மழையில் நனைந்த கோழிக்குஞ்சென நடுங்கிக் கொண்டிருந்தாள்.
இருட்டின் மிரட்சியும் இடியின் சத்தமும் அவளை இன்னும் பயத்தில் ஆழ்த்தியது.
சூழ்நிலை அறியாத பேதையோ, அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள்.
முதல் முதல் ஒரு பெண்ணின் ஸ்பரிசம். உள்ளுக்குள் ரசாயன மாற்றம் ஏற்பட்டு இளமை பூக்கள் பூத்தது...
தூரத்திலிருந்து அழைப்பு சத்தம் கேட்டதும். பட்டென அவனை விட்டு ஓடி விட்டாள்.
அவள் அவனை விட்டு சென்று விட்ட போதிலும்.
இவன் அப்படியே சிலை என நின்றிருந்தான்.
இதழோரம் புன்னகைப் பூ, மனதோடு மழைச்சாரல்...
தேவதை போல் திடீரென வந்து உள்ளம் கவர்ந்து, வெட்டும்
மின்னல் என மறைந்து போனவளை எண்ணி அகம் மகிழ்ந்தான்.....மழை நின்று இருக்க இவன் தங்கும் இடத்திற்கு சென்றடைந்தான்....
அது ஒரு தனியார் தங்கும் விடுதி...
குளித்து முடித்து உணவருந்தி உறங்குவதற்குச் சென்று இருந்தான்..
ஆனால் உறக்கம் மட்டும் அவன் கண்களை தழுவ மறுத்தது.
நினைவெல்லாம் அவள் நிறைந்து இருந்தாள்.
ரயில் சிநேகம் போல் முகமறியாமல் சட்டென அறிமுகம் ஆனவள் தானே அவளை ஏன் நினைக்கிறாய் என்று புத்தி உரைத்தாலும்..
மனம் அவளை மறக்க மறுத்தது...
அவன் வாழ்க்கையில் ஆயிரம் பெண்களை கடந்து வந்து விட்டான். ஆனால் யாரும் அவனே இந்த அளவுக்கு ஈர்த்தது இல்லை..
ஆனால் இவள் வித்தியாசமானவள்.. இவளை மறக்க அவனால் முடியவில்லை. அது ஏனோ..உடலால் ஈர்க்கப்படாமல் உள்ளத்தால் ஈர்க்கப்பட்ட காதல் இதுதானோ...
பதில் அறியாத கேள்விகள் பல எண்ணத்தில் தோன்றியது..
டேய்.... ராகவ் என்ன டா இப்படி ஆகிட்ட.
love at first sight னு சொல்லுவாங்க அது இதுதானா.
