part -9

31 4 0
                                    

part -9

         ராகவின் மனம் இன்று ஆனந்த கூத்தாடியது.... இனம் புரியா இன்பத்தில்  திளைத்து போய் இருந்தான்  அதன் காரணம்  தான் என்னவோ.

காரணம் காரிகை அவளின் வருகையே. ஆயிரம் யானைகள் பலம் தான் வராதோ கண்மணி அவளின் கரம் இவன் மேல் படுகையில். பேரன்பும் பெருக்கி போகாதோ பேதை அவள் கண் பார்க்கும் வேளையிலே.... அவளின் ஒரு சின்ன செய்கை அவனுக்கு இவ்வளவு சந்தோஷத்தை  தந்து இருக்கிறது..

இது அவனுக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் இருக்கும் ஒரு எதிர்பார்ப்பு தான் ஏன் அவளும் கூட அன்றைக்கு இவனைத்தானே தேடினாள்.

ஏன் அவளுக்காக இவன் பேசப் போகிறானா அல்லது இவனுக்காக அவள் விளையாட போகிறாளா. இரண்டுமே இல்லை இது உணர்வு சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். ஆயிரம் பேர் அந்த அரங்கில் கூடியிருந்தாலும் நமக்காக மட்டுமே பார்த்திருக்க ஓர் உறவு உள்ளது என்ற உணர்வு..

சுக துக்கங்களில் பங்கு கொள்வதற்கு தானே நமக்கு துணை தேவைப்படுகிறது... அது இன்று பலரும் மறந்து விடுகின்றனர்.
வாழ்க்கைத் துணைக்கு நம் வாழ்வில் நடக்கும் அத்தனைக்கும் உரிமை உண்டு, பங்கும் உண்டு. அன்பிற்கு அவ்வளவு வலிமை உள்ளது..

அன்று match நல்ல முறையில் நடைபெற்றது. இவர்களது கல்லூரி அணி வெற்றியும் பெற்றது. அதிக ரன்களை குவித்ததற்காக  ராகுவிற்கு  man of the match என்ற சிறப்பு பட்டமும் அளிக்கப்பட்டது..

தன் அகமுடையானின் வெற்றியை கண்டு இவள் பெரிதும் சந்தோஷப்பட்டாள். விழியில் ஆனந்தக் கண்ணீர் நிரம்பியது.

போட்டி முடிந்ததும் பத்திரமாக  அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வீடு சென்றடைந்ததும்  தகவல் தருமாறு ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிப்படுத்தினான்.

இவனது சக நண்பண் ஒருவன் ஏன்... ராகவ் அந்த பொண்ணு உன் match பாக்க வந்தது ஒரு சின்ன விஷயம் அதுக்கு நீ  ஏன் இவளோ சந்தோசமா இருக்க.. இன்னும் கேட்டா நீ  அவளுக்கு இத விட நிறைய பண்ணியிருக்க.. அதுக்கு அந்த பொண்ணு உனக்கு என்ன கைமாறு பண்ணும்னே தெரியல. நீ  என்னடானா அவ என்னமோ லவ்வ சொல்லிட்ட மாதிரி  இப்படி பரவசப்படுற..இவ்ளோ பேர் இங்கு இருந்தும் அவ ஒருத்தி வந்தது உனக்கு ஏன் அவ்ளோ சந்தோஷமா இருக்கு....

தவமின்றி கிடைத்த வரமேTempat cerita menjadi hidup. Temukan sekarang