part- 10

37 4 2
                                    

            
         போட்டி இனிதே முடிவுற்றது..
புதிய நட்பின் வருகையால் அன்று செண்பாவின் மனம் இன்னும் ஆனந்தத்தில் மூழ்கியது. இருவரும் பேசிக் கொண்டிருந்ததில் பொழுது போனதே தெரியவில்லை.

வீட்டிற்கு செல்ல நேரம் ஆனது.... சரி கார்த்தி டைம் ஆச்சு நான் கிளம்புறேன். and one more thing thank u so much.

அடடா...... நான் தெரியாம தான் கேட்கிறேன் ஒரு சின்ன விஷயத்துக்கு நீ எவ்வளவு வாட்டி தான் தேங்க்ஸ் சொல்லுவ. விட்டா போஸ்டர் அடிச்சு ஓட்டுவ போல. take it easy da

hello.... mister இந்த தேங்க்ஸ் நீங்க என்ன காப்பாற்றுனதுக்கு கிடையாது.

பின்ன வேற எதுக்கு.

இந்த நன்றி உன்னுடைய நட்பிற்காக.

ஃப்ரெண்ட்ஷிப்குள்ள தேங்க்ஸ் சாரி சொல்றதே மகா தப்பு..இதுல நீ
ஃப்ரண்ட் ஆனதுக்கு வேற தேங்க்ஸ் சொல்றியா..??

உனக்கு சொன்னா புரியாது கார்த்தி  its a girl  thing. பிரண்ட்ஸ் எப்பவுமே நிறைய பேர் கிடைப்பாங்க கார்த்தி. ஆனா உயிர்த்தோழன் என்று ஒருத்தர் தான் இருப்பாங்க. அதுவும் ஒரு பொண்ணுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைக்கிறது அவ்வளவு கஷ்டம். நீ எனக்கு நல்ல நண்பன் அதுக்கு தான் அந்த தேங்க்ஸ்.

பார்றா...... அது எப்படி பார்த்ததுமே என்னை நல்லவன்னு  சொல்ற.

ஒருத்தன் கிட்ட மணிக்கணக்கா பேசி பழகி தான் அவனை நல்லவனா கெட்டவனா சொல்லணும்னு அவசியம் இல்ல. ஒரு பொண்ணுக்கு மட்டும் பார்த்த உடனே தெரிஞ்சுரும் இவன் எப்படிப்பட்டவன் என்று..
i feel u r my solumate...

அவனது அகமும் முகமும் சேர்ந்து சிரித்தது. உண்மையா செண்பா நான் நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிட்ட பேசி இருக்கேன் பழகி இருக்கேன்.. ஆனா உன்கிட்ட பேசும் போது ஒரு இனம் புரியாத  நிம்மதி மனசுல ஏற்படுது. அதனால இன்னைல இருந்து நீ இந்த கார்த்தியோட பெஸ்ட் ஃப்ரண்ட். நீ இனிமே ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. நான் எப்பவும் உன் நிழல் போல உன்னை பின் தொடர்ந்து கொண்டே தான் இருப்பேன்..

தவமின்றி கிடைத்த வரமேWhere stories live. Discover now