செண்பாவின் வீட்டிற்கு கார்த்தி சென்றிருந்தான். அவர்கள் எல்லோரிடமும் பேசி பழகினான்..உறவுகள் ஆயிரம் பேர் கிடைப்பாங்க. ஆனா ஒரு நல்ல நண்பன் கிடைக்கிறது தான் கஷ்டம். அதுவும் ஆண் பெண் இடையே நல்ல நட்பு வளர்வது ரொம்பவே கஷ்டம்... அந்த வகையில எனக்கு செண்பா ஓட நட்பு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்..
எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம் பா நீயும் இந்த வீட்டு பையன் மாதிரி தான் பா.
என்னை மட்டும் தான் சேர்த்துப்பீங்களா இல்ல என் ஆளையும் சேர்த்துப்பீங்களா...!??
இவன் என்ன சொல்றான் என்று தெரியாமல் அனைவரும் விழித்தனர்..
என்னம்மா அப்படி பாக்குறீங்க அனாதையா சுத்திக்கிட்டு இருந்த என்னோட வாழ்க்கையில அன்பு கொண்டு வந்த ஒருத்தி இருக்கா.. பார்த்ததும் மனசுக்கு புடிச்சது பழகுனதுல இன்னும் புடிச்சது. அதான் அவங்க அம்மா அப்பா கிட்ட அனுமதி கேட்டேன். அவங்களும் சம்மதிச்சாங்க. நாங்க ரெண்டு பேரும் விரும்புகிறோம். இதுல ஏதாவது தப்பு இருக்குனு நினைக்கிறீங்களா.
கண்டிப்பா இல்லப்பா உங்கள் இரண்டு பேர் குடும்பத்தில் சம்மதிச்சிட்டாங்கன்னா அப்புறம் என்னப்பா பிரச்சனை. அவளும் எங்க வீட்டோட பொண்ணு தான். கண்டிப்பா ஒரு நாள் அந்த பொண்ணையும் கூட்டிட்டு வீட்டுக்கு வா..ப்பா.. நீ வேத்துமையா நினைக்காத உனக்கு இந்த குடும்பத்துல எல்லா உரிமையும் இருக்கு..
அந்த நம்பிக்கையில் தான்மா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாம்னு வந்திருக்கேன்....
இவன் என்ன சொல்லப் போகிறான் என்று தெரியாமல் அவள் விழித்துக் கொண்டிருந்தாள்..
என்ன விஷயம் பா ஏதாவது உதவி வேணுமா தயக்கப்படாம கேளு
உதவி இல்லம்மா ஒரு அனுமதி வேணும்.
இவள் என்ன சொல்லப் போகிறான் என்பது சுதாரித்துக் கொண்ட செண்பா. கார்த்தி அத பத்தி ஏன் இப்போ நான்தான் அதை விட்டுடுன்னு சொன்னேன் இல்ல...
