part - 8
அன்றைய பொழுது அவனுடன் இனிதே கழிந்தது. அவன் எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் அவனுடைய வண்டியில் செல்ல மறுத்து விட்டாள்.
அவள் மாநகர பேருந்திலேயே தன்னுடைய வீட்டுக்கு சென்று அடைந்தாள்.
இவளது இந்த சின்ன வெற்றியே அவளது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடன் பிறந்தோர் இவளை கொண்டாடினர். குடும்பமே அதைக் கண்டு மகிழ்ந்தது.
மற்றவர்களுக்கு இது சாதாரணமாக பட்டாலும் அவளை சார்ந்தவர்களுக்கு இது மிகவும் பெரிய விஷயமே.
தனக்காக வேண்டி அவள் செய்த முதல் முயற்சியில் அவள் கண்ட வெற்றி இது. இதில் ஒரு வேளை தோல்வியுற்றிருந்தால் மீண்டும் தன் கூட்டுக்குள் சென்று இவள் ஒளிந்து கொள்ள கூடும் என்று பயந்தனர். ஆனால் இந்த சின்ன வெற்றியை அவளுக்கு ஊக்கத்தை தான் கொடுத்திருக்கிறது.
ஆனால் செண்பாவுக்கு இது வெறும் ஊக்கத்தை மட்டும் தரவில்லை. புது தன்னம்பிக்கையை தந்திருக்கிறது. தன்னைத் தானே அவள் நேசிக்க தொடங்கி விட்டாள்.
ஒரு சில விஷயங்களில் நாம் பூனையைப் போல் தனக்குத்தானே கண்ணை மூடிக்கொண்டு இந்த உலகம் இருட்டு என்று நினைத்துக் கொள்ளலாம் . அப்பொழுதுதான் சில அனாவசிய காட்சிகள் நம் கண்ணில் படாது. இனி எந்த காரணத்தைக் கொண்டும் இவள் தன்னை விட்டு தரப்போவதில்லை. தோல்வியோ வெற்றியோ எதுவாயினும் முயற்சிப்பதில் ஒரு தனி சுகமே உள்ளது. அதை சுவைத்து விட்டாள் இனி அது சலிக்கவே சலிக்காது.
மறுநாள் இவள் கல்லூரிக்கு சென்றாள். எப்பொழுதும் போல் தோழிகளுடன் பேசிவிட்டு வகுப்பறை நோக்கி சென்றாள்.
வகுப்பறையில் சக மாணவிகள் என்ன செண்பா நேத்து போனியே என்ன ஆச்சு என்றனர்.
இவள் பதில் சொல்லும் முன்னரே செண்பாவை v. p அழைப்பதாக ஒரு மாணவன் வந்து கூறினான்.
ஓஹோ ரிசல்ட் தெரிஞ்சிருச்சு போயிட்டு வா உனக்கு இருக்குது இன்னைக்கு.. என்று நக்கலாக சிரித்தனர்.
![](https://img.wattpad.com/cover/351772031-288-k69680.jpg)