சுடும் நிலவு சுடாத சூரியன் – 1
தை மாதத்தின் இளங்குளிர் காலை பொழுது. வாசலில் இரு புறமும் கிளை விரிந்து பரந்திருந்த கொன்றை மரங்கள் மஞ்சளும் இளஞ்சிவப்புமாக வண்ணமயாக நின்றிருந்தது. கடற்கரையிலிருந்து வீசிய இளங்காற்று, கொன்றை பூக்களின் மீது படர்ந்திருந்த பனித்துளிகளை நிலமகளின் மேல் உதிர்த்து விளையாடி, காலை பொழுதை இனிமையாக்கியதுவாசலில் கட்டியிருந்த மாவிலை தோரணம், குலை தள்ளிய வாழை மரங்கள், பெரிய மாக்கோலமும் வீட்டில் நடக்கவிருக்கும் மஙகல நிகழ்வை அறிவித்தன
"சம்யு.. சம்யு..." என அம்மா அழைக்கும் குரல் கேட்டும் படுக்கையை விட்டு எழ மனமின்றி புரண்டு படுத்தாள் சம்யுக்தா."அவ இன்னும் கொஞச நேரம் தூங்கட்டுமே வினோ? அவ இப்பவே எழுந்து என்ன செய்ய போகிறாள்" என்ற கணவனை முறைத்தார்
"உஙகளுக்கு ஞாபக மறதி அதிகமாகி விட்டது. இன்னிக்கு மதியம் மாப்பிள்ளை வீட்டில் மெஹ்ந்தி சங்கீத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சிருக்காங்க, இவ எழுந்து ரெடியாக வேண்டாமா?", என்றார் வினோதினி.
"எப்படி மறக்கும், அது மதியம் மூன்று மணிக்கு தானே.. எட்டு மணி வரைக்கும் குட்டிம்மா தூங்கட்டுமே" என்றார் வசந்தன்.
"இன்னிக்கு ஒன்பது மணிக்கு ரிசப்ஷன் டிரச் ரிக்ர்சல் பார்க்க போகணும். மாப்பிள்ளை சரியாக ஒன்பது மணிக்கு வந்து விடுவார்" என்றார் வினோதினி.
"என்னம்மா மாப்பிள்ளை என்று பலமாக மரியாதை எல்லாம் கொடுக்கறேங்க, நம்ம சசி தானேம்மா. நில்லுன்னா நிக்கப் போறான், உட்காருன்னா உட்காரப் போறான்", என்றப்படியே உள்ளே வந்தான் மித்ரன்.ஆறடிக்கும் மேலான உயரம், கோதுமை நிறம், சுருள்சுருளான கருமையான தலைமுடி. கூர்மையான ஒளி விடும் கண்கள். அகன்ற நெற்றி, வலிமையான கரஙகள். தன் கண்ணே பட்டு விடும் என்று முகத்தை கடுமையக்கிக் கொண்ட வினோதினி, "அப்பாக்கும் பையனுக்கும் வீட்டில் கல்யாணம் நடக்குதே என்று ஏதாவது பொறுப்பு இருக்கா? நான் தான் எல்லாவற்றுக்கும் அலைய வேண்டியதாக இருக்கு" என்றார்.
ВЫ ЧИТАЕТЕ
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Любовные романыதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்