சுடும் நிலவு சுடாத சூரியன் – 6
மித்ரன் எஃப்.ஐ.ஆர் எழுதி கொடுத்ததும், அகிலன் அதை தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சம்யுவின் போட்டோவுடன் மின் அஞ்சல் செய்தான்.
"மித்ரன், நாம ஸ்மிருதியை இன்னொரு தடவை விசாரிக்கலாமா? உங்க வீட்டுக்கு வர சொல்லேன்" என்றான்.
சரி என தலையசைத்த மித்ரன் ஸ்மிருதியை தன் வீட்டிற்கு வர சொன்னான்.வீட்டிற்கு சென்ற போது, அழுது கொண்டிருந்த வினோதினியை ஸ்மிருதி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அகிலன் ஸ்ருதியிடம் நடந்ததை விவரிக்கும்படி சொன்னான். ஸ்மிருதி விவரித்தவுடன், "ஸ்மிருதி, நீங்க தான் சம்யுவை பிக் அப் செய்யறீங்க என்று உங்க வீட்டில் யாருக்கெல்லாம் தெரியும்?" என கேட்டான்.
"எனக்கு மட்டும் தான் தெரியும். அம்மாவும் அப்பாவும் ஊருக்கு போயிருந்தாங்க" என்றாள்.
"மித்ரன், உங்க வீட்டில் யாருகெல்லாம் தெரியும்?" என கேட்டான்.
"எனக்கே ஹோட்டலுக்கு வந்த பிறகு தான் தெரியும்" என நடந்ததை விவரித்தான்.
வினோதினி, "கிளம்பும் போது தான் எங்களுக்கே ஸ்மிருதி பிக் அப் பண்ணுவாள் என்று ஸம்யு சொன்னாள்" என்றார்.
"அவ அதை சொல்லும் போது யாரெல்லாம் இருந்தீங்க?" என கேட்டான் அகிலன்.
"நான், அவங்கப்பா, மாபிள்ளை மட்டும் தான் இருந்தோம். அது தான் அவளை நான் கடைசியாகப் பார்த்தது" என சொல்லும் போதே அழுது விட்டார்."ஸ்மிருதி, சம்யு உங்கிட்ட அவளை பிக் அப் பண்ண சொல்லும் போது யாரெல்லாம் இருந்தாங்க?" என கேட்டான்.
"அவ நேரில் சொல்லலை. வாட்ஸாப் சாட்ல தான் டிசைட் பண்ணோம்" என்றாள்.
மித்ரனுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. தன் பெற்றோர் எதிரில் காண்பித்துக் கொள்ளாமல் சோஃபாவில் உட்கார்ந்தான்.
இது லோக்கல் ரவுடிகளோ தாதாக்களோ செய்ததில்லை. சம்யுகதா செய்தி சேகரித்ததோ லோக்கல் என்கவுண்டர் விவகாரம். என்னையோ, அப்பாவையோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அம்மாவோ வீட்டை தவிர வேறு எதுவும் தெரியாதவர். ஒரு வேளை சசியை யாராவது மிரட்டுகிறார்களோ என யோசிக்கத் தொடங்கினான்.
YOU ARE READING
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romanceதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்