சுடும் நிலவு சுடாத சூரியன் – 10
"வெற்றிவேலா?" என அதிர்ச்சியாக கேட்டான் மித்ரன்.
"ஆமாம். ஈரோடு பக்கம் அவர் பெரிய ஆளாம். மினிஸ்டரும் அவர் ஊர் தான் போலிருக்கு" என்றான் அகிலன்."அகில், நான் உங்கிட்ட வந்து நேரில் பேசறேன். அதுக்கு முன்னாடி அவர் பெயர் வெற்றிவேல் தானா என்று கன்ஃப்ர்ம் பண்ணி எனக்கு சொல்லு" என்று செல்லை அணைத்தான்.
வெற்றிவேல் தாத்தாவா? இப்போது தானே வந்து ஸம்யுவை பார்த்து விட்டு, அவனையும், சசியையும் அவளை ஒழுங்காக பார்த்துக் கொள்ள வில்லை என்று திட்டி விட்டு சென்றார்.
ஸம்யுவை தன் வீட்டிற்கு கூட்டி சென்று பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறேன் என்று வேறு சொன்னாரே. மித்ரனுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.அவர் பெயரை சொல்லி வேறு யாராவது இதை செய்கிறார்களா என யோசித்தான். அவரிடம் யாராவது உதவி கேட்டிருக்கலாம். அவரும் என்ன கேஸ் என்று தெரியாமல் அமைச்சரிடம் உதவ சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது.
அவரிடம் நேரில் சென்று பேசினால், அவருக்கு உண்மை தெரிந்து பெயில் மூவ் பண்ணுவதை நிறுத்துவார் என்று தோன்றியது. தாத்தாவிற்கு ஸம்யுக்தாவின் மேல் எப்போதும் பிரியமும், பாசமும் அதிகம். கண்டிப்பாக உதவுவார் என்று தோன்றியது.
வெற்றிவேல் தாத்தாவின் வீட்டிற்கு மித்ரன் செல்வது இதுவே முதல் முறை. பெஸன்ட் நகரில் கடற்கரை சாலையில் அமைந்திருந்த மிக பெரிய வீட்டின் வாசலில் தன் வண்டியை நிறுத்தினான்.வாசலில் நின்றிருந்த செக்யுரிட்டியிடம் தன் கார்ட்டை கொடுத்துக் காத்து நின்றான். கடலில் இருந்த எழுந்த குளிர் காற்று அவனது காக்கி உடுப்பையும் தாண்டி குளிர செய்தது.
சிறிது நேரத்தில், உள்ளேயிருந்து வந்த அவரது உதவியாளார் அவனை அழைத்துச் சென்றார்.
அவர் வீட்டின் ஹாலின் அளவே, தங்கள் மொத்த வீடும் என்று நினைத்துக் கொண்டான். உட்கார்ந்தவுடன் புதையும் குஷன் சோஃபா அவனை உள் வாங்கி கொண்டது. வீட்டில் எல்லாவற்றிலும் செல்வ செழிப்பு தெரிந்தது.
ESTÁS LEYENDO
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romanceதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்