சுடும் நிலவு சுடாத சூரியன் – 7
"வேகமாக போங்க ப்ளீஸ்" என அவனின் தோளினை கெட்டியாக பற்றிக் கொண்டாள். "என்னன கடத்தி அடைச்சு வைச்சிருந்தான். அவன் வர்றதுக்குள்ளே இங்கிருந்து போகணும். ப்ளீஸ் வேகமாக போங்க" என அவசரப்படுத்தினாள்.
அவன் வண்டியை வேகமாக செலுத்த, அடித்த காற்றில் தூசி பறக்க அவள் கண்களை மூடி கொண்டாள். கண்களுக்குள் ஏதோ தூசி விழ அதை எடுக்க கூட முடீயாமல் கண்களை அழுந்த மூடி திறந்தாள். அப்போதும் கண்களிலில் தூசி உறுத்த கண்ணை இறுக மூடி கொண்டாள்.சிறிது தூரம் சென்று வண்டி நிற்பது தெரிய, "ப்ளீஸ் வண்டியை நிறுத்தாதீங்க" என கெஞ்சும் குரலில் சொன்னாள். ஆனால் அவனோ வண்டியை ஆஃப் செய்ய, வேறு வழியின்றி கண்களை கஷ்டப்பட்டு பிரித்தாள்.
"நோ" என அலறியவள், "ப்ளீஸ். வண்டியை கிளப்புங்க, இது தான் அவன் என்னை அடைச்சு வைச்சிருந்த இடம். அவன் வந்திட போறான்" என அவள் சொல்லும் போதே, அந்த ஒடிசலான பையன் மூச்சிறைக்க ஒடி வந்தான்."கொஞ்சம் அசந்தவுடனே ஒடி போச்சண்ணே" என்றவனை படீரென்று கன்னத்தில் அடித்தான்.
வண்டியிலிருந்து இறங்கியவள், பயத்தில் பின்னால் இரண்டடி வைத்தாள். ஹெல்மெட்டை கழற்றியவன் அவளின் கைகளை பற்றி தரதரவென்று இழுத்து சென்று அறையில் அடைத்து கதவைச் சாத்தினான்.திரும்பவும் இருட்டான அறையில் அடைத்ததில், அழுகை அழுகையாக வந்தது. பாதங்களில் குத்திய முட்களாலும் கற்களாலும் கால்கள் வலித்தன. சாப்பிட்டதை வாயில் எடுத்ததாலும், வேகமாக ஒடியதாலும் களைத்து போய், கண்கள் இருட்டி கொண்டு வர கீழே மயங்கி சரிந்து படுத்தாள்.
எத்தனை நேரம் மயங்கியிருந்தாளோ, எங்கோ ஓநாய் ஊளையிடும் ஓசை கேட்டதால் எழுந்தாள். தலை பாரமாக வலிக்க, கண்களை கஷ்டப்பட்டு பிரித்தாள். வெளியில் பறவைகள் கத்தும் ஒலி கேட்டதாலும், அறையினுள் மெலிதாக வந்த வெளிச்சத்தினாலும் காலை பொழுது விடிந்து விட்டதை உணர்ந்தாள்.தொண்டை வரண்டு போனதால் கத்த கூட முடியாமல், "தண்ணி, தண்ணி என முனங்கினாள்.
தன் குரல் தன்க்கே கேட்காமல் போனதை நினைத்து, அழ தோன்றினாலும் அதற்கும் சக்தியின்றி, திரும்பவும் சோர்ந்து படுத்துக் கொண்டாள்.
அறை கதவு திறக்கும் ஒசை கேட்டும், கண்களை திறக்காமல் அப்படியே கீழே படுத்திருந்தாள். அவளின் அருகில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைக்கப்பட்டு மீண்டும் கதவு சாத்தப்பட்டது.
ESTÁS LEYENDO
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romanceதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்