சுடும் நிலவு சுடாத சூரியன் – 13
"ஹாய் செம.. யுக்.. தா!!... மித்ரன் டிட் ஐ ஸ்பெல் இட் ரைட்?" என ஆவலுடன் கேட்டான்.
"நோ ஸிட், இட் இஸ் ஸம்யுக்தா" என திருத்தினான் மித்ரன்."அண்ணா, போலாம்" என மித்ரனின் காதுகளுக்குக் கேட்கும் படி மெதுவாக முனுமுனுத்தாள் சம்யுகதா.
"ஹோ, இட் இஸ் டஃப் மேன். ஐ வில் கால் ஹெர் யுக்தா" என சிரித்தபடி சொன்னான்."அண்ணா, ப்ளீஸ் போலாம்" என மறுபடியும் கெஞ்சும் குரலில் சொன்னாள்.
"ஹவ் ஆர் யூ டூயிங் யுக்தா.. ஐ ஆம் சித்தார்த் குமரவேல். யூ கேன் கால் மீ ஸிட்" என தன் வலது கையை நீட்டினான்.
தன் அண்ணனை இறுக பற்றி கொண்டவள், "அண்ணா.." என மேலே சொல்ல முடியாமல் குரல் அடைக்க, தலையை குனிந்து கொண்டாள்.யோசனையுடன் அவளை பார்த்தவன், "மித்ரன், உங்க ஸிஸ்டர் கன்ஸ்ர்வேட்டிவா இருக்காங்க. தாத்தா, தமிழ் பொண்ணுங்க டிரேடிஷனல் அண்ட் கன்ஸ்ர்வேட்டிவ் என்று சொன்னார். நான் அப்ப நம்பலை, இப்ப நேரில் பார்க்கும் போது தான் தெரியுது" என சிரித்தபடி தன் நீட்டிய கைகளை அப்படியே வைத்தபடி சொன்னான்.
தன் தங்கை பயப்படுவதை உணர்ந்தவன், "அப்படியில்லை ஸிட். இன்னிக்கு ஏதோ அவளுக்கு மூட் சரியில்லை. வி வில் மீட் ஸம் டைம் லேட்டர்" என சொன்னான் மித்ரன்.
"ஷுயூர் மித்ரன். எனக்கு இங்க சென்னையில் யாரும் ஃபிரண்ட்ஸ் இல்லை. இந்த ஸண்டே ஃபிரியா இருந்தா எங்காவது போலாம். யுக்தா கேன் ஆல்ஸோ ஜாயின் வித் அஸ்" என அவன் சொல்லும் போது, ஸம்யுக்தாவிற்கு கண்களை இருட்டி கொண்டு வருவது போலிருந்தது.
நல்ல வேளையாக மித்ரன், "பை டேக் கேர்" என சித்தார்த்தின் தோள்களை தட்டி விட்டு, அவளுடன் முன்னால் நடந்தான் மித்ரன்.
"அண்ணா, சீக்கிரம் போலாம்" என சொன்னவளை கவலையுடன் பார்த்தபடி நடந்தான் மித்ரன்.சிறிது தூரம் சென்றவுடன், தன்னை அடக்கி கொள்ள முயன்றும், முடியாமல் அவள் திரும்பி பார்த்தாள். அவன் அதே இடத்தில் முகத்தில் உறைந்த புன்னகையுடன், கூர்மையாக அவளை பார்த்தபடி நின்றிருந்தான்.
ŞİMDİ OKUDUĞUN
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romantizmதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்