சுடும் நிலவு சுடாத சூரியன் – 32
"சம்யு, நீ சொல்றது எனக்குப் புரியலை" என தன் நெற்றியைத் தேய்த்து விட்டபடி மறுபடியும் கேட்டான் அகிலன்.
"அகில் அண்ணா, அவர் என்னை முன்னாடி கடத்தியிருந்தா தானே திருமபவும் கடத்த முடியும்?" என அவள் கேட்டவுடன், தலையைத் திருப்பி மித்ரனை வினோதமாக பார்த்தான் அகிலன்.
"அப்போ நீ வைத்தியர் வீட்டில் அடிப்பட்டு கிடந்தது எல்லாம் பொய்யா?" என கோபமாக கேட்டான் மித்ரன்.
"அண்ணா, உனக்கு முதலில் இருந்து சொன்னா தான் புரியும். உனக்கே தெரியும், சசி தான் என் பின்னாடி சுத்திட்டிருந்தான். வேறு வழியில்லாம தான், நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இவரைப் புடவை கடையில் தான் முதலில் பார்த்தேன். பார்த்தவுடனே இவர் தான் என் ஸோல் மேட் என்று தெரிஞ்சு போச்சு. இரண்டு பேரும் மீட் பண்ணி பேசினோம். எனக்கு இவரை ரொம்ப பிடிச்சுப் போச்சு. இவருக்கு என் மேலே ஆசை இருந்தாலும், எனக்கு கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க என்று தெரிஞ்சதும் பின் வாங்கிட்டார். எனக்கு எப்படி கல்யாணத்தை நிறுத்தறது என்று தெரியலை. வேற வழியில்லாம நானும் ரவியும் பிளான் பண்ணி, பார்லர்லிருந்து எஸ்கேப் ஆயிட்டோம். ரவி தலைமாலை கெஸ்ட் ஹவுஸ் கீயை எனக்காக திருடி வைச்சிருந்தான். நானும் ரவியும் அங்கே தான் இருந்தோம். இவருக்கு அஞ்சு நாள் கழிச்சு தான் நாங்க தலைமாலை கெஸ்ட் ஹவுஸில் இருக்கிறோம் என்று தெரிஞ்சுது. நான் செஞ்சது தப்பு என்று திட்டி, என்னை ஜீப்பில் சென்னைக்குக் கிளப்பிட்டு வந்தார். காட்டு வழியே வரும் போது, எதிரே யானை வந்ததால், இவர் ஜீப்பை நிறுத்த, நான் சரிவில் குதிச்சிட்டேன். அது மலை சரிவு என்கிறதால் எனக்கு நிறைய அடிபட்டிருச்சு. உடனடியாக எனக்கு வைத்தியம் பார்க்கனும் என்று என்னை வைத்தியர் வீட்டில் கொண்டு சேர்த்தார்" என முச்சு விடாமல் சொன்னாள்.
அவள் சொன்னதை கேட்டதும், அனைவரும் எப்படி உணர்ந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. நாதன் பெருமூச்சு விட்டு உடலை தளர்த்திக் கொண்டார். ரவி, சேரில் இறுக்கம் தளர்ந்து சாய்ந்து உட்கார்ந்தான். வசந்தனது முகத்திலும் சொல்ல முடியாத நிம்மதி பரவியது. மித்ரனின் முகம் கோபத்தில் சிவந்தது. அகிலனது முகத்தில் புன்னகை பரவியது.
ESTÁS LEYENDO
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romanceதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்