சுடும் நிலவு சுடாத சூரியன் – 12
சமயுக்தா போலிஸ் தலையமைகத்தில் மித்ரனின் அறையில் அமர்ந்திருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பு, அவளை மருத்தவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். வலது கையை தேவைக்கதிகமாக அசைக்க வேண்டாம் என மருத்தவர் சொல்லியிருந்தார். காலில் காயம் ஆறியிருக்க, அவளால் இப்போது மெதுவாக வலியில்லாமல் நடக்க முடிந்தது.உள்ளே வந்த மித்ரன், "சம்யும்மா, அகிலன் சந்தேகப்படற குற்றாவளிகளோட பரேட் ஏற்பாடு பண்ணிட்டிருக்கான். இன்னும் இரண்டு நிமிஷத்தில் வந்து விடுவான்" என்றான்.
"அண்ணா, ப்ளீஸ்.. அவரை திரும்பி என்னை கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ண வேண்டாம் என்று சொல்லுங்க. அவர் எத்தனை தடவை கேட்டாலும் அதையே தான் சொல்ல போறேன். நான் என்னமோ குற்றவாளி மாதிரி என்னையே விசாரணை செஞ்சிட்டிருக்கார். அமிதா அண்ணிக்காக பார்க்கிறேன். இல்லைன்னா, போங்கய்யா, நீங்களும் உங்க விசாரணையும் என்று போயிட்டே இருப்பேன்" என குரலை உயர்த்தி சொன்னாள்."தாங்க்ஸ் ஸம்யு, அவளால் தான் எனக்கு ஸ்டேஷனில் வேலையே நடக்குதுனு உங்க அண்ணிகிட்ட சொல்றேன்" என சிரித்தபடி உள்ளே வந்தான் அகிலன்.
"நீங்க ரொம்ப போரடிக்கிறீங்க, எனக்கு திரும்ப, திரும்ப அதே பதில் சொல்ல எரிச்சலாயிருக்கு" என அகிலனை பார்த்துச் சொன்னாள் சம்யுகதா.
"சம்யு, உன்னை எரிச்சல் படுத்தனும் என்பது எங்க நோக்கமில்லை. உங்கிட்டேயிருந்து வர்ற ஒரு சின்ன தகவல் கூட எங்களுக்கு ரொம்ப உபயோகமாக இருக்கும். உன் மேல சந்தேகப்பட்டு எதுவும் கேட்கலை. உன்னை அறியாம சில விஷயங்களை நீ மறந்திருக்கலாம். உங்கிட்ட கேட்கும் போது, அது உனக்கு சட்டென்று ஞாபகம் வரலாம். அதனால் தான் அகிலன் உங்கிட்ட அப்படி தினமும் வந்து கேட்டு விட்டு போறான்" என்றான் மித்ரன்.
"சம்யு, போகலாம் வா, குற்றவாளிங்களை வரிசையில் நிற்க வைச்சிருக்காங்க. நீ வந்து அவங்களை பாரு. மொத்தம் பத்து பேர் இருக்காங்க. எல்லோருக்கும் நம்பர் கொடுத்திருக்காங்க. உன்னை கடத்தினவன் அங்கே இருந்தா, உடனே ரியாக்ட் பண்ணாதே. உள்ள வந்து எங்க கிட்ட சொல்லு" என்றான் அகிலன்.
ESTÁS LEYENDO
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romanceதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்