Sudum Nilavu Sudatha Suriyan - 26

763 90 150
                                    

சுடும் நிலவு சுடாத சூரியன் – 26

அகிலன். ரவிகுமார் எடுத்துக் கொண்டு வந்த டீயை மெதுவே உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தான். மித்ரன் வீட்டின் உள்ளே செல்லும் ரவிகுமாரை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

வெறுப்பாக தலையை அசைத்து, கண்களை உருட்டினான் மித்ரன்.
"யாரோ எங்கிட்ட நாளைக்கு எல்லாம் சரியாயிடும் என்று தத்துவம் எல்லாம் பேசினாங்க" என சொல்லிவிட்டு டீயை ரசித்துக் குடித்தான் அகிலன்.

தன்னை முறைத்த மித்ரனிடம், "டீ ரொம்ப நல்லாயிருக்கு, எங்கே வாங்கறாங்க என்று கேட்கனும்" என்றான்.

"இப்போ டீ ரொம்ப முக்கியம்" என கோபமாக சொன்ன மித்ரனிடம், "நாளைக்கு நடக்க போறதை நாளைக்குப் பார்த்துக்கலாம். இப்போ இந்த நிமிஷம் நிதர்சனம், அதை அனுபவிக்கலாம்" என்றான் அகிலன்.

"சரிங்க அகிலனானந்தா" என கிண்டலாக சொன்ன மித்ரன், "இந்த ஊர் காத்து என்று நினைக்கிறேன். எல்லோரையும் தத்துவம் பேச வைக்குது" என்றான்.

"இதை நான் சொல்லலை, ஒஷோ சொல்லியிருக்கார்" என்றான் அகிலன்.

"எப்போ நீ ஒஷோ படிக்க ஆரம்பிச்சே?" என கேட்ட மித்ரனிடம், "சில கேஸில் உண்மை தெரிஞ்சும், நம்மால ஒன்னும் செய்ய முடியாம போகும் போது, சொல்ல தெரியாத வெறுமை நம்மை சூழ்ந்துக்கும். அதிலே தான் நிறைய போலிஸ்காரங்க பாட்டிலை தொட ஆரம்பிப்பாங்க. நான் அந்த மாதிரி சமயத்தில் தான் ஒஷோ படிக்க தொடங்கினேன்" என்ற அகிலனை பார்த்தவன், "அப்போ அந்த ஸீஷோர் ஹோட்டலில் மட்டையானது யாருங்க?" என நக்கலாக கேட்டான்.

"ஜாலியா குடிக்கறதுக்கும், வெறுப்பில் குடிக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு, மித்ரன். நம்ம வேலையில் எப்பாவது தான் சந்தோஷமா இருப்போம். பாதி நாள் வெறுப்பில் தான் சுத்திட்டிருப்போம்" என ஆழ்ந்த குரலில் சொன்னான் அகிலன்.
போனில் பேசி கொண்ட அவர்கள் அருகே வந்து அமர்ந்தார் நாதன்.

"புலி ஏதாவது கண்ணில் பட்டுதா மித்ரன்?" என கேட்டார்.

"இல்லை அங்கிள், புலிங்க இந்த சரணாலயத்தில் இருக்கா என்று சந்தேகமா இருக்கு. அடைச்சு வைச்சிருந்த புலிகங்களை தான் பார்த்தோம்" என்றான் மித்ரன்.

Completed - Sudum Nilavu Sudatha SuriyanWhere stories live. Discover now