சுடும் நிலவு சுடாத சூரியன் – 15
மதியம் தன் அறைக்கு வந்த அகிலனை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் மித்ரன்.
"ஹாய்.." என ஈனஸ்வத்தில் சொன்ன அகிலனை எதுவும் சொல்லாமல் கூர்மையாக பார்த்தான்."மித்ரன், யூ லுக் ஸ்மார்ட். நீ விரைப்பா இருக்கும் போது, அப்படியே கம்பிரமா அன்புசெல்வன் மாதிரியே இருக்கேடா" என சிரித்தபடி சொன்னான்.
எதுவும் பேசாமல் கைகளை கட்டியப்படி அமர்ந்திருந்தவனை, "போதும்டா, ரொம்ப சீன் போடாதே. இது என்ன, இப்போ தான் முதல் தடவையா நடக்குதா?" என கேஷுவலாக சேரில் அமர்ந்தான்.
"உன்னை அப்படியே அந்த ரிசார்ட்டில் விட்டு வந்திருப்பேன். திருந்தவே மாட்டியா? உனக்கு எப்போ தான் கண்ட்ரோல் வரும்?" என கோபமாக சொன்னான்.
"எல்லாம், நீ இருக்கிற தைரியம் தான்டா" என சொன்னவன், "நேற்று என்னாச்சு?" என கேட்டான்."நீங்க இரண்டு பேரும் மட்டையானது தான் நடந்தது. உன்னை உன் வீட்டுக்குக் கூட்டிட்டு போனா, அமிதா உன்னோடு சேர்த்து என்னையும் கட்டையால அடிப்பானு தான், உன்னை போலிஸ் ஹாஸ்டலில் கொண்டு விட்டேன். அமிதாவுக்கு நீ முக்கியமான கேஸுக்காக வெளியே போயிருக்கிறதா சொன்னேன். சித்தார்த்தையும் அவங்க தாத்தா வீட்டில் கொண்டு போய் விட்டேன். நாதன் அங்கிள் பார்த்த பார்வையில், ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணேன்" என்றான் மித்ரன்.
"அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா. இன்னிக்கு நீ என்னை காப்பாத்தினா, நாளைக்கு டீச்சர் கிட்டேயிருந்து நான் உன்னை காப்பாத்தறேன்" என அமர்த்தலாக சொன்னான்.
"டேய். எங்கேயிருந்துடா வர்றீங்க நீங்க எல்லாம்? நானே இன்னும் அவ கிட்ட ஒரு வார்த்தை கூட பேசலை. ஆனா ஊர் ஃபுல்லா இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு" என அலுத்துக் கொண்டான்.
"ரொம்ப சிம்பிள்டா, காதலிக்கறவங்களுக்கு உலகம் தெரியாதுடா, ஆனா உலகத்துக்குக் காதலிக்கறவங்களை நல்லாவே தெரியும்டா" என சிரித்தான்.
ESTÁS LEYENDO
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romanceதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்