சுடும் நிலவு சுடாத சூரியன் – 31
திங்களன்று காலை அகிலனின் அறை கதவை திறந்து உள்ளே வந்தான் மித்ரன். அகிலன் போனில் பேசி கொண்டிருக்க, அவன் எதிரே இருந்த சேரில் அமர்ந்தான்.
மித்ரன் பொறுமையில்லாமல் மேஜையில் இருந்த பேப்பர் வையிட்டை உருட்டுவதைப் பார்த்த அகிலன், போன் பேசி கொண்டே அவன் கையில் இருந்து அதை பிடுங்கி தன் மேஜை டிராவில் வைத்து மூடினான்.
போனை கீழே வைத்தவன், "என்ன மித்ரன், காலையிலேயே இவ்வளவு டென்ஷனா இருக்கே?" என கேட்டான்.
"இப்போ தான் கமிஷனரிடம் பேசிட்டு வந்தேன். சித்தார்த் அரெஸ்ட் வாரண்ட் பத்தி அவருக்கு ஒண்ணும் தெரியலை. நீ எதுவும் அவரிடம் சொல்லலை போலிருக்கு" என குற்றம் சாட்டும் குரலில் சொன்னான்.
"சம்யுவை பத்து மணிக்கு வர சொல்லியிருக்கேன். அவ வந்து ஸ்டேட்மெண்ட் கொடுத்தவுடன், சித்தார்த்துக்கு அரெஸ்ட் வாரண்ட் இஷ்யு பண்ணிடலாம்" என்றான் அகிலன்.
"உனக்குத் தெரியும் இல்லை, அவனை கைது பண்ண, கமிஷனரிடம் பர்மிஷன் வாங்கனும்" என கோபமாக கேட்டான்.
"தெரியும்டா, அவன் அமெரிக்கன் சிட்டிசன். அவனை கைது பண்ணனும் என்றால் கமிஷனரிடம் அனுமதி வாங்கனும் என்று தெரியும்" என சிரித்துக் கொண்டே சொன்னான்.
"அவன் இன்னிக்கு நைட் ஊருக்குக் கிளம்பறான் என்று தெரியுமில்லை. நாம லேட் பண்ணா கிளம்பி போயிட்டே இருப்பான்" என கண்கள் அலைபாய சொன்னான்.
"என்னை நம்பு மித்ரன், நான் பார்த்துக்கிறேன்" என சொன்னவனை எரிச்சலுடன் பார்த்தவன், "அகில், இனிமே உன்னை நான் ஜென்மத்துக்கும் நம்பவே மாட்டேண்டா" என சொல்லி விட்டு எழுந்து ஜன்னல் பக்கம் சென்று நின்று கொண்டான்."ஏன் மித்ரன்?" என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அவனருகே சென்று நின்றான் அகிலன்.
"கூடவே இருந்தியே, நீ செய்யற வேலையை பத்தி ஒரு வார்த்தை சொன்னியா? முரளிதரன் மேல, எங்கப்பா மேல சந்தேகம் இருக்கு என்று ஏன் எங்கிட்ட சொல்லவே இல்லை?" என ஆயாசத்துடன் கேட்டான் மித்ரன்.
ŞİMDİ OKUDUĞUN
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romantizmதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்