Sudum Nilavu Sudatha Suriyan - 5

836 72 42
                                    

சுடும் நிலவு சுடாத சூரியன் – 5
ஸம்யுக்தா காணாமல் போய் இன்றோடு நான்கு நாட்களாகி விட்டது. செல் ஃபோனை வைத்து டிரேஸ் செய்து விடலாம் என இருந்த நம்பிக்கையும், அவளின் ஸ்லிங் பாகையும் அதிலிருந்த செல் ஃபோனையும் பார்த்ததில் தகர்ந்து போனது.
கண்ட்ரோல் ரூமிலிருந்த வந்த விடியோ க்ளிப்பிங்கைப் பார்த்ததில், அந்த நேரத்தில் வந்த ரெட் ஐ20 காரின் நம்பர் தெரிந்தது. ஸன் ஷேட் கருப்பாக ஒட்டியிருந்ததால் டிரைவரின் முகம் தெரியவில்லை. ஒரு நிமிடம் தாமதமாக வந்த ஸ்மிருதியின் காரும் அதில் பதிவாகியிருந்தது.

காரின் நம்பரை கண்ட்ரோல் அறைக்கு அனுப்பி, அதன் உரிமையாளரின் பெயரையும் முகவரியையும் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வாங்கி அனுப்பச் சொன்னான் அந்த பகுதியில் மற்ற சிக்னல்களின், சிசி டிவி பதிவகளையும் தேடச் சொன்னான்.
பத்து நிமிடத்தில் திரும்பவும் அழைத்தவர்கள், அது ஒரு ஸ்கூட்டியின் எண் என்றனர், அந்த வண்டியின் உரிமையாளர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் என்றதும் மித்ரனுக்கு இது திட்டமிட்ட ஆள் கடத்தல் என்று புரிந்து போனது.

ஸம்யுக்தாவை கடத்திய கார், ஒரு மணி நேரத்திற்குப் பின்பும் எந்த டிராஃபிக் சிக்னலின் வழியாக வெளியே செல்லாதது தெரிந்தது. போலீஸ் அந்த பகுதியிலிருந்து செல்லும் சாலைகளை அடைத்து, தேடுதல் வேட்டையை துவங்கியது. மெயின் ரோடிலிருந்து பிரிந்து சென்ற நிழல்கள் அடர்ந்த முட்டு சந்தில் அந்த கார் யாருமில்லாமல் நின்றிருந்தது.
பக்கத்து வீடுகளில் அந்த காரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. மதிய நேர வேளை என்பதால் அதிக ஆள் நடமாட்ட்மும் இல்லை.

மித்ரனுக்கு கண்களை இருட்டி கொண்டு வந்தது. இதை விட ஆட்டம் காட்டும் கேஸ்களைப் பார்த்திருக்கிறான். இப்படி உடனடியாக சோர்வானதில்லை. மற்ற கேஸ்களுக்கும் இதற்கும் ஒரே வித்தியாசம். சம்யுக்தா!. அவளை நினைக்கும் போதே நெஞ்சடைத்த்து.

கண்களில் நீர் துளிர்க்க, மனம் உடனடியாக தன் அம்மாவை நினைத்தது. மெஹந்தி ஹாலில் அனைவரும் காத்திருப்பார்களே என தோன்ற அகிலனை செல்லில் அழைத்து, சம்யுக்தாவிற்கு அடிப்பட்டு விட்டதால் சங்கீத்தை கேன்ஸல் செய்ய சொன்னான், அருகேயிருந்த மருத்தவமனைக்கு, தன் பெற்றோர்களையும், சசிதரன் குடும்பத்தினரையும் மட்டும் வர சொன்னான். .

Completed - Sudum Nilavu Sudatha SuriyanOù les histoires vivent. Découvrez maintenant