சுடும் நிலவு சுடாத சூரியன் – 28
சித்தார்த் வைத்தியரை சுட்டிக் காட்டியதும், மற்றவர்களை விட, முரளிதரனும், வசந்தனும் அதிர்ந்தனர். மித்ரனுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. ஆனால் அகிலனின் முகத்தில் எந்த மாறுதலும் தென்படவில்லை.
"நாம வீட்டுக்குக் கிளம்பலாம் சசி, எனக்கு டயர்டா இருக்கு. சித்தார்த், நீ ஃபிரியா இருக்கும் போது கால் பண்ணு" என எழுந்தார்.
"அங்கிள் உட்காருங்க, அப்பறம் போலாம்" என அகிலனின் குரல் கடுமையாக ஒலித்தது.
"நீ யாருப்பா, என்னை கண்ட்ரோல் செய்ய? எனக்கு உடம்பு சரியில்லை நான் வீட்டுக்குக் கிளம்பறேன்" என கோபமாக சொன்னார் முரளிதரன்.சசி, "அகில், அப்பாவுக்கு ப்ளட் பிரஷர் இருக்கு. அவரை டென்ஷன் செய்யாதே. நாங்க கிளம்பறோம்" என சசியும் எழுந்தான்.
"சசி, நான் உங்க ஃபிரண்ட் அகிலனா சத்திக்கு வரலை. ஏ.ஸி.பி அகிலனா தான் வந்திருக்கேன். இப்போ ஏஸிபி அகிலனா தான் உங்கப்பாவை உட்கார சொல்றேன்" என்றவனது முகம் உணர்ச்சிகளற்று இருந்தது.
"அப்படியெல்லாம் என்னை மிரட்ட முடியாது அகிலன். எனக்கும் சட்டம் தெரியும். நான் உங்க கமிஷனர் கிட்ட புகார் கொடுப்பேன்" என சொன்னார் முரளிதரன்.
"கமிஷனர், எனக்கு சம்யுக்தா கடத்தல் வழக்கில் யாரை வேண்டுமானாலும் விசாரிக்க அதிகாரம் கொடுத்திருக்கார். அரெஸ்ட் வாரண்டோ, கோர்ட் ஆர்டரோ தேவையில்லை" எனறவனது குரல் அதிகாரமாக ஒலித்தது.
அமிதாவிற்கு, அகிலனது இந்த குரலும், உடல் மொழியும் அறியாதது. அகிலனை அவள் வியப்புடன் கண்கள் விரித்துப் பார்த்தாள்.
"இப்போ, இங்கே நடக்கிறதுக்கும், அவ கடத்தபட்டதுக்கும் என்ன சம்பந்தம்? எதையோ, எதுக் கூடவோ முடிச்சுப் போட முயற்சி செய்யாதே" என நடக்க தொடங்கினார்.
"மிஸ்டர் முரளிதரன். இந்த தெரு முனையில் லோக்கல் போலிஸ் என் போன் காலுக்காக வெயிட் பண்றாங்க. ஸீன் கிரியேட் பண்ணாம வந்து உட்காருங்க" என சொன்னான்.
DU LIEST GERADE
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romantikதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்