சுடும் நிலவு சுடாத சூரியன் – 8
அவன் கதவருகில் நிற்பதை பார்த்ததும் மனதில் பயம் தோன்றினாலும், காட்டிக் கொள்ளாமல், "காலில் அடி.. பட்டிருந்தது. இப்ப.. நடக்க முடியுதானு.. பார்த்தேன்.." என திணறி சொல்லி முடிக்கும் முன்பு அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.கதவில் சாய்ந்து நின்றவன், நிமிர்ந்து அவளருகே வந்தான். அவன் அருகே வருவதை பார்த்ததும், ஸம்யுவிற்கு இதயம் தடதடக்க ஆரம்பித்தது. தான் சொன்னது அவளுக்கே நம்புவதை போல இல்லை. இவன் இப்போது என்னை தரதரவென்று உள்ளே இழுத்துச் செல்ல போகிறான் என்று நினைத்தாள். இல்லை வேறு ஏதாவது என்று நினைக்கும் போதே கண்கள் இருட்டுவது போலிருந்தது.
அவளருகே வந்தவன், தனது ரப்பர் செருப்பை கழட்டி அவளை பார்த்து அணிந்து கொள்ள செய்கை செய்தான். அவளுக்கு முதலில் அவன் செய்கை செய்தது புரியவில்லை, ஆனால் புரிந்தவுடன் மனதில் அப்பாடா என்று நிம்மதி வந்தது.
தயக்கத்துடன் அவனது செருப்பை அணிந்தவள், "தாங்க்ஸ்" என்றாள்.
அவன் அதை காதில் வாங்காமல், அவளை நடக்கும்படி செய்கை செய்தான்.
எதிரே தெரிந்த காட்டுப் பாதையில் அவள் மெதுவாக நடக்க, அவனும் சுற்றிலும் பார்த்தபடி நடந்து வந்தான்.இவனருகே இருக்கும் போது தப்பிப்பது என்பது நடக்கவே முடியாத ஒன்று என தெரிந்தாலும், அந்த வீட்டிற்குள் அடைந்து இருப்பதை விட இது நன்றாக இருப்பதாக தோன்றியது. காட்டுக்குள் இளங்காலையில் நடப்பது உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது.
"உங்க பெயர் என்ன?" என தயங்கியபடி அவள் கேட்டும், அவன் பதில் எதுவும் சொல்லாமல் நடந்தபடி இருந்தான்.
"என்னை எதுக்காக கடத்தி வைச்சிருக்கீங்க?" என சற்று சத்தமாக கேட்டும் அவன் பார்வை இவளை நோக்கி திரும்பாமல் இருப்பதை உணர்ந்தாள்.
அப்போது தான் அவளுக்கு ஒன்று மூளையில் உறைத்தது. அவனை பார்த்தது முதல் கடந்த மூன்று நாட்களாக அவன் ஒரு முறை கூட வாயை திறந்து பேசவில்லை. ஒல்லியான பையனும் அவனுடன் பேசும் போது, எதிரே நின்று வாயை மட்டும் மெதுவாக அசைப்பதை நினைவு கூர்ந்தாள்.
YOU ARE READING
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romanceதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்