Sudum Nilavu Sudatha Suriyan - 2

1K 80 39
                                    

சுடும் நிலவு சுடாத சூரியன் – 2
"வாங்க சசி", என்று வாசலுக்குச் சென்று வரவேற்ற வசந்தனிடம், "எதுக்கு மாமா இந்த மரியாதை, நானும் மித்ரன் மாதிரி உங்க மகன் தான்" என்றவனிடம், "தெரியும் சசி, இனிமே மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாங்க கொடுக்கனும் இல்லையா?" என அவன் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தார்
"வா சசி, டிஃபன் சாப்பிடலாம்" என அழைத்த மித்ரன் தன் அருகிலிருக்கும் சேரை நகர்த்தினான்.

சசிதரன் மாநிறத்தில், சராசரிக்கும் அதிக உயரத்தில் இருந்தான், சுருட்டை தலை முடியும், அகன்ற நெற்றியுமாய் பார்ப்பதற்கு எடுப்பாய் இருந்தான்.
"ஹை சசி" என்ற மகளிடம், :"சம்யு திருமணம் முடியும் வரை மாபிள்ளையை மற்றவர்கள் எதிரில் பேர் சொல்லிக் கூப்பிடாதே என்று சொன்னேன் இல்லை", என்றவரிடம், "இங்கே மற்றவங்க யார் இருக்காங்க, நீங்க தானே இருக்கீங்க", என்றாள் சம்யுக்தா.

"அத்தை அவளை அப்படியே இருக்க விடுங்க, மற்றவற்களுக்காக வேஷம் எல்லாம் போட வேண்டாம்" என்ற சசியிடம், "உங்களை மாதிரி கண்வன் கிடைக்க எங்க சமயு கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றார் வினோதினி
"உங்க மகளுக்கும் உங்களை மாதிரியே அதிர்ஷ்டம் அத்தை", என்று அவன் சொன்னவுடன், அவன் முதுகைத் தட்டி, "கரெக்ட் சசி" என சிரித்த வசந்தனைப் பார்த்து மித்ரனும்,சம்யுக்தாவும் வலிந்து செயற்கையாக புன்னகை செய்தனர்.

தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மித்ரனிடம், "டேய் அண்ணா, இவங்க யாரும் இன்னும் வளரவேயில்லையே, இப்போ தான் எனக்கு நிஜமாகவே சிவாஜி படம் பார்க்கிற எஃப்க்ட் வருது" என்றாள் மெல்லிய குரலில்.
பொங்கி வந்த சிரிப்பை உதட்டை மடித்து அடக்கியப்படி, "கடவுள் இருக்கான் குமாரு, இதை தான் நீ உன் லைப் முழுசா பார்க்கப் போகிறாய்" நல்லா அனுபவி", என்றான் நக்கலாக

உதட்டை மடித்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவள், தன் அண்ணனை மேலும் கீழுமாக பார்த்து வந்த சிரிப்பை அடக்க தன் கைகளால் வாயை மூடி கொண்டாள்.
என்னவென்று புருவத்தைத் தூக்கி கேட்டவனிடம், ""டேய் அண்ணா, எனக்காவது என்ன பார்க்கப் போகிறேன் என்று தெரியும், உன்னை நினைச்சாலே ரொம்ப பாவமா இருக்கு. உனக்கு நம்ம ஸ்கூல் மிஸ் கிட்டயிருந்து எப்பவும் ஸ்கேலால் அடியும், முதுகில் டின்னும் தான்" என்று முனுமுனுத்தாள். அதை அப்படியே கற்பனை செய்து பார்த்தவள், வந்த சிரிப்பை அடக்க முடியாமல் உரக்க சிரித்து விட்டாள்.

Completed - Sudum Nilavu Sudatha SuriyanTempat cerita menjadi hidup. Temukan sekarang