சுடும் நிலவு சுடாத சூரியன் – 30
சித்தார்த் சொன்னதை கேட்டதும் மித்ரன் அதிர்ந்து விட்டான். ஆனால் அகிலனோ காலையில் இருந்து இருப்பது போல் எந்தவித உணர்வுகளுமின்றி நின்று கொண்டிருந்தான்.
அமிதா குழப்பமாக வசந்தனை பார்க்க, வினோதினியின் முகம் அதிர்ச்சியில் உறைந்திருந்தது. ஸம்யுக்தாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அப்பாவா என்று திகைத்தாள். எல்லா மகள்களையும் போல் அவள் தந்தை தான் அவளுக்கு ஹீரோ. மித்ரன் உட்பட, எந்த ஆணையும் தன் தந்தையை அளவுகோலாக வைத்தே பார்த்தாள். சசிதரன் அந்த அளவுகோலின் கீழே இருந்ததால் தான், அவனது காதலுக்கு உடனடியாக சரியென்று சொல்லவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவளுக்குள் தன் தந்தை தவறு செய்திருக்க மாட்டார் என்று அடித்துக் கூறியது. சித்தார்த் தன் தவறை நியாயபடுத்த ஏதோ சொல்கிறான் என நினைத்தாள்.
வெற்றிவேல், வைத்தியர், நாதன், சித்தார்த் மற்றும் ரவிகுமாரின் முகங்கள் உணர்வுகளற்று இருக்க, முரளிதரனின் முகம் பாறையாய் இறுகி இருந்தது. சசிதரன் தன் தந்தையின் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு, வசந்தனின் முகத்தைப் பார்த்தான். வசந்தனது பார்வையோ இலக்கில்லாமல் வெறித்தபடி இருந்தது.
வசந்தன் ஏதாவது சொல்வார் என்று அனைவரும் எதிர்பார்க்க, அவரோ எதுவும் பேசாமல் மெளனமாக இருந்தார். மித்ரனால் சித்தார்த் சொன்னதை நம்பவே முடியவில்லை. அவனால் தன் தந்தை தவறு செய்திருப்பார் என்று எண்ணவே முடியவில்லை. அவரது மெளனம், தவறு செய்ததை ஒத்துக் கொள்வதாக தோன்றும் என்பதால், அவர் எதிரே வந்து மண்டியிட்டு அமர்ந்தவன், "அப்பா, சித்தார்த் பொய் சொல்றான் என்று சொல்லுங்கப்பா. எனக்குத் தெரியும், நீங்க தப்பே செஞ்சிருக்க முடியாது. எங்க டிபார்ட்மெண்ட்டில் என் மேல் மதிப்பு வைச்சிருக்கிற காரணம், நான் ஒரு திறமையான போலிஸ் என்பதால் இல்லைப்பா, நான் ஒரு நேர்மயான போலிஸ்காரன் என்பதால் தான்ப்பா. நீங்க தப்பு செஞ்சிருந்தா, என்னை இப்படி வளர்த்திருக்க முடியாதுப்பா" என சொல்வதற்குள் மித்ரனின் குரல் உடைந்து போனது.
أنت تقرأ
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
عاطفيةதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்