சுடும் நிலவு சுடாத சூரியன் – 4
ஸம்யுக்தா கண்களை கஷ்டப்பட்டு பிரித்தாள். சுற்றிலும் இருட்டாக இருந்தது. ஒன்றும் புரியவில்லை. இது எந்த இடம் என்று தெரியவில்லை. தலை வெடித்து விடுவது போன்று வலித்தது. கண்கள் எரிந்து நீர் வழிந்தது. உடலை அசைக்க முடியாமல் கைகள் அவள் அமர்த்தி வைக்கப்பட்டு இருந்த நாற்காலியுடன் கட்டப்பட்டு இருந்தது. கால்களும் அதே போல் நாற்காலியுடன் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது.. தொண்டை வரண்டு போய் தாகத்தினால் தவித்தது.அவள் அணிதிருந்த மஸ்தானி டிரஸ் வியர்வையில் நினைந்திருந்தது. பசி வேறு காதை அடைத்தது. இப்போது மணி என்ன்வென்று தன் வாட்சில் பார்க்க முயன்று தோற்றாள்.
கண்களை மூடி என்ன நடந்தது என யோசித்தாள். ஸ்ருதியின் கார் என்று நினைத்து வந்து நின்ற ரெட் ஐ20 காரில் ஏறினாள். ஏறியவுடன், டிரைவரை பார்த்ததும் அது ஸ்ருதியின் கார் இல்லை என்று தெரிந்தது. ஸாரி என்று சொல்வதற்குள் பின்னாலிருந்து ஒரு கை அவள் மூக்கில் ஒரு துணியை வைத்து அழுத்தியது மட்டுமே ஞாபகம் இருந்தது.
தன்னை கடத்தியிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள சில நொடிகளே பிடித்தன. அதற்கு மேல் இப்போது யோசிக்க உடலிலும் மனதிலும் வலுவில்லை. மிகவும் சோர்வாக இருந்தது.பசி அதிகரித்ததும் அம்மாவின் நினைவு வந்தது. அம்மா என்று நினைக்கும் போதே கண்ணில் நீர் நிறைந்தது
கண்ணீரை துடைக்கக் கூட இயலாமல் கைகள் கட்டியிருப்பதை எண்ணி இன்னும் அழுகை அதிகரித்தது. அழுவது கோழைத்தனம் என்று மித்ரன் சொல்வது மனதின் ஆழத்தில் இருந்து ஒலித்தது. மித்ரனை நினைத்தவுடன் சற்றே உடலிலும் மனதிலும் வலு சேர்ந்தது போல் உணர்ந்தாள்.
"யாராவது இருக்கீங்கிளா" என்று தன் சக்தி முழுவதையும் திரட்டி கூப்பிட்டாள்.
தன் குரல் தனக்கே கேட்கவில்லை என்று உணர்ந்து இன்னும் சற்றே உரக்க, ":யாராவது இருக்கீங்கீளா" என கூப்பிட்டாள்.ஒன்றும் பதிலில்லாமல் போக சோர்ந்து போனாள். கால் மணி நேரம் கடந்த பிறகு திரும்பவும் கூப்பிட, அருகில் எதோ சத்தம் கேட்பதை உணர்ந்தாள். ஏதோ அசைகின்ற ஒலியும் கால் தட ஒலியும் அருகில் கேட்டது.
சில நொடிகளுக்கு பின் கதவு திறக்கும் ஓசையும், யாரோ அருகில் நடந்து வரும் ஒசையும் கேட்டது. சுவிட்சை அழுத்தும் ஒலியும் கூடவே கேட்டது. ஒரு மங்கிய விளக்கு ஒளி பரவியது. கண்கள் சற்றே கூச கண்ணை அழுந்த மூடி திறந்தாள்.
அவளிருந்தத இடம் ஒரு பழைய அறையாக ஒட்டடை படிந்து இருந்தது. ஜன்னல்கள் அழுந்த சாத்தப்பட்டிருக்க ஒரு விதமான பழங்காலத்து கோவில்களில் அடிக்கும் வாசம் அந்த அறையை நிறைத்திருந்தது. கண்களை சுழல விட்டவளின் எதிரே அவன் நின்றிருந்தான்.
ஒடிசலான தேகம், ஒடுங்கிய முகம், தலை நிறைய எண்ணை தடவி படிய வாரிப்பட்டிருந்தது. முகத்தில் பரவலான தாடியும், பூனை முடி மீசையும் பார்ப்பதற்கு ஒரு இருபது வயது பையனாக தெரிந்தான்.. காட்டன் கட்டம் போட்ட சட்டையும், வெளுத்து போன ஜீன்சும் அணிந்திருந்தான்.
YOU ARE READING
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romanceதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்