சுடும் நிலவு சுடாத சூரியன் – 20
அவனை அங்கே எதிர்பாராததால், அதிர்ந்த மனதை ஒரு நொடியில் சமன்படுத்தி திரும்பி அங்கே தொங்கி கொண்டிருந்த டிஷர்ட்களின் சைஸை பார்த்தாள்.
"ஹாய் யுக்தா" என அவன் அழைத்ததற்குத் திரும்பாதவள், ஸ்மிருதி கண்களால் கேட்ட கேள்விக்குக், கண்களாலே ஆம் என்று பதில் சொன்னாள். ஒரு வேளை, கன்னத்தில் அடிப்பேன் என்று பேசியதை கேட்டிருப்பானோ என தோன்றினாலும், உண்மையை தானே சொன்னேன், அதற்கு ஏன் பயப்பட வேண்டும் என்று தோன்றியது.
ஸ்மிருதி நன்றாக திரும்பி அவனை பார்த்தாள். ஆறடிக்கு மேல் அடர்ந்த தலைமுடியுடன், நீல நிற கண்களுடன் நின்றிருந்தான்.
வேறு எந்த டிஷர்ட்டும் நன்றாக இல்லாததால், கிரே டிஷர்ட்டை பில் போட எடுத்துக் கொண்டு அங்கே இருந்து நகர்ந்தாள் ஸம்யுக்தா.
வழியை மறித்து நின்றவன், "ஹாய் யுக்தா, வி ஹாவ் மெட் ட்வைஸ், பேபி" என்றான்.
ஏற்கெனவே அவனை எதுவும் செய்ய முடியவில்லை என்ற கோபத்தில் இருந்தவள், அவன் பேபி என்று சொன்னதும் வந்த எரிச்சலை, பற்களை கடித்து அடக்கிக் கொண்டாள்.
"ஹாய்" என வாய்க்குள் முனுமுனுத்தவள், அவனை தாண்டி செல்ல முயன்றாள்.
"யுக்தா, உனக்கு, ஸாரி உங்களுக்கு நல்ல கலர் சென்ஸ் இருக்கு. இந்த டிஷர்ட்டில் எது எனக்கு ஸுட் ஆகும் என்று சொல்லுங்க" என அவள் செல்ல முடியாமல், இரு டிஷர்ட்களையும் தன் இரு பக்கம் பிரித்துக் காண்பித்தான்.
இரண்டையும் வேண்டா வெறுப்பாக பார்த்தவள், "இரண்டும் நல்லா இல்லை" என சொன்னாள்.
"ஹப்பா.. அட் லாஸ்ட்.. உங்களுக்குப் பேச கூட வருமா? நான் உங்களுக்குக் காது கேட்காது, வாய் பேச முடியாது என்று நினைச்சேன். பரவாயில்லை, உங்க வாய்ஸ் ஸ்வீட்டா தான் இருக்கு" என சொன்னவனின் குரலில் நக்கல் தெரிந்தது.
நிமிர்ந்து முறைத்தவளின் கண்களில் தெரிந்த சீற்றத்தைக் கண்டவன், சற்றும் நகராமல் வழியை அடைத்துக் கொண்டு அப்படியே நின்றான்.
![](https://img.wattpad.com/cover/115254414-288-k208291.jpg)
VOCÊ ESTÁ LENDO
Completed - Sudum Nilavu Sudatha Suriyan
Romanceதிருமணத்திற்கு இரு நாட்கள் முன்பு கடத்தப்படும் தங்கையை காப்பாற்ற நினைக்கும் அண்ணனின் தேடல்