நேசம் 3

666 29 12
                                    


"நான் என் தொண்டை தண்ணி வற்றும் வரைக்கும் கூப்பிடேனேடா... இப்ப இவள் கூப்பிட்டதும் வர...", ராஜு.

"என் சாக்கி ப்ரோ... நான் கூப்பிட்டா தான் வருவாங்க... இப்போ என்னடா... சாப்பிட வந்தாச்சுல... போய் சாப்பாடு வாங்கிட்டு வா போ..", நிலா.

கவின் வழக்கம் என்பது போல் ஹம்சியின் டிபன் பாக்ஸை எடுத்து உண்ணத் தொடங்கினான். அது 2 பாக்ஸ் இருக்கும் கேரியர். குட்டி பாக்ஸ். கவின் சாப்பிட வரவில்லை என ராஜு கூற... அவளால் அடுத்த பாக்ஸ் சாப்பிட முடியவில்லை. அதைத் தான் கவின் சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.

"உனக்கு இவனை முன்னாடியே தெரியுமா...", மதி.

"ஆம். இவர் எங்க காலேஜ் சீனியர். ஹம்சி டிபார்ட்மென்ட் தான். இவர் போனதும் ரொம்ப மிஸ் பன்னொம். இல்லை ஹம்சி...", நிலா.

கவின் ஆச்சர்யமாக ஹம்சியைப் பார்த்தான். அவள் எனக்கு சம்பந்தம் இல்லை என்பதுபோல எழுந்து சென்றாள் கை கழுவ.

"நம்ப முடியலையே... நீங்கள் என்னை மிஸ் பன்னீங்க...", கவின்

"என்ன ப்ரோ இப்படி சொல்லிடிங்க... எனக்கு டைரி மில்க் சாக்கி சாப்பிடும் போதெல்லாம் உங்க நியாபகம் தான்", நிலா.

"உன்னை நம்புறென். ஆனால் உன் தோழி மேல் எனக்கு நம்பிக்கை இல்லை", நிலா.

"என்ன இப்படி சொல்றீங்க... நாம உட்காரும் இடத்துல தினமும் ஈவ்னிங் இருப்பா.. ஏன் கேட்டா... சிரிப்பா... அவளுக்கு நம்ம டைம் ஸ்பென்ட் பண்ண இடம் மிஸ் பண்ண முடியலை...", நிலா.

"எனக்கு நம்பிக்கை இல்லனா விடு நிலா. எனக்கும் சாப்பாடு போதும். வாங்க போகலாம்", கவின்.

மதி மற்றும் ஹம்சி இருவரும் கேன்டீன் வெளியில் காற்று வாங்கிக் கொண்டு இருந்தனர். 6வது மாடி என்பதால் வெளியில் பார்க்க அழகாக இருக்கும். அதுவும் அந்த கட்டிடம் பின் பக்கம் படிக்கட்டு இருக்கும். அது கட்டிடம் உள்ளே ஆபத்து எனில் வெளியில் செல்ல ஏதுவாக அமைக்கப் பட்டது. அந்தப் படிக்கட்டில் அமர்ந்து இருந்தனர்.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Where stories live. Discover now