நேசம் 14

337 19 6
                                    

மாளிகை போன்ற இல்லத்தின் அனைத்து இடங்களும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ண வண்ண ஒளியில் இல்லம் முழுவதும் பிரம்மிப்பாய் இருந்தது. வெளியில் அதிகம் யாரையும் அழைக்காமல் வீட்டினர் மட்டும் சேர்ந்து நிச்சயம் செய்ய முடிவு செய்து இருந்தனர். அதன்படி குடும்ப உறுப்பினர் மட்டுமே இருந்தனர்.

கவின் மற்றும் உதய் இருவரும் மதியை ரெடி செய்ய... வேணி மற்றும் வாசுகி நிஷாவை ரெடி செய்தனர்.

வசு மதியிடம் வந்தவர் அவன் முழு உருவத்தையும் கண்ணில் நிரப்பிக் கொண்டார்.

ஆறடி உயரத்திற்கும் சற்று அதிகமாய் மாநிறத்திற்கும் கூட, கூரான நாசி, அடர்ந்த புருவம் புன்னகை படர்ந்த விழிகள், படர்ந்த தோள், தினமும் ஜிம்மில் பயிற்சி செய்து அழகான தோற்றம் பெற்று இருந்தான். என்றும் அவனை பேன்ட் டிஷர்டில் பார்த்தவர் இன்று தான் வெண்மை நிற வேஷ்டி சட்டையில் பார்க்கின்றார்.

"என் கண்ணே பட்டிடும்... சுத்திப் போடனும் அரசு", வசு.

"பாட்டி இது என்ன ஓர வஞ்சனை. நான்", கவின்.

"என் பேரன் மூணு பேரும் மூணு இளவரசன்கள் தான்", வசு.

"வசு அப்போ நீ தான் எங்களுக்கு இளவரசியா", என்று உதய் கிண்டல் செய்ய..

"படவா..சீக்கிரம் வாங்க டா", வசு.

"சரிங்க பியூட்டி", மதி.

"எனக்கு இதில் சுத்தமா விருப்பமே இல்லை. நீ எதுக்கு இதுக்கு சம்மதம் சொன்ன... எனக்குப் பிடிக்கல சொல்ல வேண்டியது தான...", வாசுகி.

"அம்மா.. ஏன் அப்படி சொல்றீங்க... மாமாக்கு என்ன குறை... எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்", கண்களில் கனவுகளுடன் நிஷா கூறினாள்.

"நீ எப்படி டி என்க்குப் பிறந்த.. சை... என்னவோ பண்ணுங்க", என்று கூறிய வாசுகி கோவமாக சென்று விட்டார்.

பூவினை எடுக்கச் சென்று இருந்த வேணி உள்ளே வந்து நிஷாவினை அழைத்துக் கொண்டு சென்றார்.

மதியினைக் கவினும் உதயும் நிச்சய மேடையில் அமர வைத்து கேலி செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Where stories live. Discover now