நேசம் 8

416 24 10
                                    


"என்ன ஆனாலும் சரிதான்... இனி உங்கள் வாய்ஸ் இருக்குற இடம் தேடி கண்டிப்பா ஹம்சி கூட நானும்  வந்துடுவேன். அதுல சந்தேகமே வேண்டாம். சும்மா செஞ்சிட்டிங்க...", நிலா.

"என்னமா செஞ்சான். பாடுனதா தான் எனக்கு நியாபகம்", ராம்.

"உங்களுக்கு நியாபக மறதி இல்லையா பாஸ். மறதினு நினச்சேன். தெளிவா தான் இருக்கிங்க...", நிலா.

"இதுக்கு தான் வாய் வச்சிட்டு சும்மா இருக்கனும் சொல்றது...", கவின்.

"என் வாய் சும்மா தான் டா இருக்கு... இவள் வாய் தான் நீளமா இருக்கு", ராம்.

"பாஸ் ஸ்கேல் இருக்கா...", நிலா.

"என்னை ஆள விடு சாமி. நான் உன் வழிக்கே வரலை. தோ வந்துடேன் டா. ஏன் டா இவ்வளவு மெதுவா கூப்பிடுற... காதுல விழல பாரு", என்றவன் யாரும் அழைக்காமல் வேகமாக அவ்விடம் விட்டு நகர

"டேய் எங்க காதுலயும் விழல... சரி பொலச்சு போ...", கவின் சிரித்துக் கொண்டே நிலாவுடன் ஹம்சியை வந்தடைந்தனர்.

ஹம்சி அவனிடம் வாழ்த்து தெரிவிக்க கை கொடுக்க... கவின் அதை விடுத்து அவளை மெல்லிதாக அணைக்க ஹம்சி தான் தடுமாறினாள். கவின் அனைவரையும் அணைத்து மகிழ்ச்சியைப் பகிர...  அவனின் செயலில் அவளுக்கு வேற்றுமை தெரியவில்லை. ஆனால் அவளுக்கு உணர்வுகள் பளிச்சென்று தெரிந்து கொள்ள...அதை மீண்டும் அடக்கினாள். மூவரும் கேன்டீன் செல்ல...

"ஹேய் கவின் நான் டுடே மாட்டிகிட்டேன். சாரி நான் வர முடியவில்லை", ரக்ஷி.

"அதுலாம் பிரச்சினை இல்லை   ரக்ஷி. அப்புறம் என்ன ஆச்சு. யாருகிட்ட... வழக்கம் போல... ராகவ் சார் தானா", கவின்.

"என்ன மாட்டிகிட்ட... என்ன சொல்ற", ஹம்சி.

"சொல்றேன் ஹம்சி. ஆமாம் கவின். அவரே தான். அப்புறம் என்ன.. செம டோஸ். வாங்கிட்டு இப்போ தான் வந்தேன்.", என பெருமூச்சு விட்டாள் ரக்ஷி.

"மேடம் க்ளாஸ் போர் அடிச்சா பேக் டோர் வழியா எஸ் ஆகிடுவாங்க... அப்படி ஒரு முறை செய்ய... ராகவ் கிட்ட மாட்டிகிட்டா. அதே மாதிரி இன்னைக்கும் ஆகிடுச்சு. அப்படித்தான ரக்ஷி", ராம்.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Where stories live. Discover now