நேசம் 5

482 26 6
                                    


நடந்தவற்றை நிலா கூற... ஹம்சி பயந்தாள்... நிலா தைரியசாலி. எதையும் தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டுமே இருப்பது அவளுக்கு அரவே பிடிக்காது. ஆனால் ஹம்சி பயந்த சுபாவம் கொண்டவள்.

குணத்தில் எப்படி வேறுபாடு உள்ளதோ அதே போன்று தான் உருவத்திலும்... (ஆனால் வாய்க்கு மட்டும் இருவருக்கும் கோல்டு மெடல் தான் கொடுக்கனும்🤣) நிலா மஞ்சள் கலந்த வெண்மை நிறம். மாசு மருவற்ற முகமும் செவ்விதழும் பெற்றவள். வடிவான, பூசினார் போன்ற உடல்வாகு ஆனால் அதுதான் அவளுக்கு மிகுந்த அழகைக் கொடுக்கும். திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு.

ஹம்சி தூய வெண்மை நிறம். மாசு மருவற்ற முகமும் பின்க் நிற இதழ் பெற்றவள். சற்று அளவான, சிறுத்த இடை கொண்ட, நின்று பார்க்கும் அழகு.

"பிரச்சினை பண்ண மாட்டாங்களா டி... நாளைக்கு லீவ் போட்டிடலாமா..", ஹம்சி.

"சரி. நாளைக்கு லீவ் போடுறோம். அடுத்த நாள் பிரச்சினை பண்ண மாட்டாங்களா... என்ன நடந்தாலும் நான் பார்த்துக்குறேன். நீ பயம் இல்லாம வா..", நிலா.

"சரி டி", ஹம்சி.

நிலாவும் ஹம்சியும் பள்ளியில் இருந்தே நண்பர்கள். நிலா, ஹம்சி வீட்டினர் அனைவருக்கும் பழக்கம். நிலா உடன் என்பதால் மட்டுமே ஹம்சியை வெளியில் அனுப்பினர் ஹம்சியின் பெற்றோர். நிலாவின் தந்தை, இல்லம் மற்றும் ஸ்கூட்டி என அனைத்தையும் ஏற்றுக் கொள்ள.. இவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. கல்லூரி செல்லும் முதல் நாள் வந்து இருந்துவிட்டு வீடு திரும்பினர். நிலாவின் தந்தை அவளை ஹம்சி வீட்டில் விட்டவர் தான். அதற்கு பின் போனில் கூட அழைக்கவில்லை. அவளுக்குத் தெரியும் தந்தை தன் நினைவாகத் தான் இருப்பார் என்று.. ஆனால் விதி...!

கல்லூரியில் இருந்து இல்லத்தினை அடைந்தவர்கள் ப்ரஷ் ஆகிவிட்டு அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர். ஹம்சி வீட்டிற்கு அழைத்து பேசுவது... நிலா அருகில் உள்ள குழந்தைகளுடன் ஹைட் அண்டு ஷீக் விளையாடுவது.. அசைன்ட்மென்ட் எதுவும் இருந்தால்.. இருவரும் இரவில் விழித்து முடித்துவிட்டு தான் உறங்குவர்.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin