நேசம் 11

385 28 9
                                    


ஐசியூவிலிருந்து மாற்றப்பட்டு வேறு அறைக்கு சென்றதும் அனைவரும் உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த நர்ஸ் சத்தம் போடாமல் பார்க்க சொல்ல..

வசு கண் முழித்தார். அவர் சுற்றிலும் அனைவரையும் வலம் வந்தவர் கவின் அருகில் நின்ற மதியைக் கண்டதும் கண் கலங்க... அருகில் அழைக்க...

"பாட்டீ....", அதுவரையிலும் கண் கலங்கி மட்டும்  இருந்தவன் பெறும் கேவலுடன் வசுவின் கைகளைப் பற்றி கைகள் நடுங்க குலுங்கி ஆழத் தொடங்கினான். தந்தை தாய் இறப்பிற்கு கூட இப்படி அழுததில்லை. அவனின் வாழ்நாட்கள் முழுவதும் வசுவுடன் கழிய... தந்தை தாயாக அவரின் விழிகளில், அரவணைப்பில் கண்டவன் துடித்தான்.

வசு திரும்பி கவினை விழிகளில் அழைக்க அவனும் மதியின் கரத்தின் மீது தன் கரத்தினைப் பதித்து வசுவின் தலையினைக் கோதினான்.

வசுவின் முகத்தில் சிறியப் புன்னகை. அனைவரும் அதில் தைரியம் அடைந்தனர். உதய் அவர்கள் இருவரிடமும் சென்று அணைத்துக் கொள்ள... வசு உதயிடம் கரத்தினைக் காட்ட.. உதயும் அவர்கள் கரத்தினைப் பற்றிக் கொண்டான். குடும்பம் மொத்தமும் அவர்கள் அன்பினைக் கண்டு என்றும் போல் நிம்மதியுடன் வெளியில் சென்றனர்.

கவின் மற்றும் மதி மட்டும் உள்ளே இருக்க... பாட்டி தனது சுவாசக் குழலை எடுக்க சொன்னார். கவின் மறுக்க... தனது கரத்தினைத் தூக்கி கவின் காதினைத் திருக முயற்ச்சிக்க.. கவின் குனிந்து காதினைக் கொடுத்தான். அவரும் புன்னகையுடன் வலிக்காதவாறு திருக... மதி சுவாசக் குழலை இறக்கினான்.

"டேய்... நான் உன் காதைத் திருகவாவது உயிரோட வருவேன் டா. அதுக்குள்ள போய்ட மாட்டேன்", வசு கவினிடம் சிரித்தபடி கூறினார்.

"பாட்டி. இப்படி பேசாதீங்க. ப்ளீஸ்", மதி.

"டேய் என்ன மரியாதைலாம் வருது... என்ன வேண்டும். காரியம் ஆகனும்னா தான் பாட்டி சொல்வ...", வசு.

"பியூட்டி. உனக்கு கொஞ்சமாவது தைரியம் இருக்கிறதா... எங்க கிட்ட மட்டும் உன் தைரியம் காட்டு. உன் குட்டி இதயம் அதுகிட்ட உன்னால பைட் பண்ண முடியல. இனி அத தைரியமா பைட் பன்னுனாதான் நீ என் பியூட்டி",  ம்தி உள்ளே வலித்தாலும் வெளியில் புன்னகையுடன் வசுவினை கிண்டல் செய்ய...

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ