நேசம் 24

364 23 12
                                    

இரவு நேரம் வீட்டினை அடைந்த கவின் மிகுந்த மன அழுத்தத்தில் தான் இருந்தான். திருமண விசயத்தில் அவசரப் பட்டுவிட்டோம் என நினைத்தவன் மதியிடம் சொல்லி ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு மதியினைக் காணச் சென்றான். மதி, அறையில் அப்பொழுதுதான் குளித்து விட்டு வந்தவன்..

"ஹேய் ஹம்சி எப்படி இருக்கா டா. நிலாக்கு கால் பண்ணேன். ஃபீவர்னு சொன்னா. ஓகே தான", மதி.

"ம்ம்ம்... ஓகே தான்டா.. நான் உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.. ", கவின்.

"என்னடா எதுவும் சீரியஷ்னா மாடிக்குப் போகலாமா", மதி.

"பரவால்லா.. இங்கே யாரும் இப்போதைக்கு வரமாட்டாங்க... ", கவின்.

சரி எனக் கூறி இருவரும் கட்டிலில் அமர்ந்தனர்.

"எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைடா. ஏன் எதுக்குன்னு கேட்காத... அதுக்குக் காரணம் எனக்கேத் தெரில. ஆனால் இந்தக் கல்யாணம் நடந்தா நான் பைத்தியம் ஆனாலும் ஆச்சர்யப் பட இல்லை. நான் சொல்ல வரது உனக்குப் புரியுதா டா", கவின்.

"அப்போ ஏன் சரின்னு சொன்ன... நீ வேண்டாம் சொன்னால் பியூட்டி சரின்னு தான் சொல்லிருக்கும். அப்போ சரின்னு சொல்லிட்டு இப்போ வேண்டாம்னு எப்படி சொல்ல முடியும். அதுவும் சண்டே பொண்ணு வீட்டுக்கு வரோம் சொல்லியாச்சு", மதி பாவமாகக் கவினைப் பார்க்க

"இப்போ தானடா கேட்டிங்க.. அதுக்குள்ள பொண்ணு வீட்டிலேயே சம்மதம் வாங்கியாச்சா...", கவின் அதிர்ந்து கேட்க..

"சம்மதம் மட்டும் இல்லை. உனக்கு நிச்சயமும் அன்னைக்கு தான். கல்யாணம் மட்டும் உனக்கும் எனக்கும் ஒன்னா வைக்கலாம் அப்படின்னு ப்ளேன்", மதி கூற..

"ஷிட்.... ஏன் இப்படி எங்கிட்ட சொல்லாம", என்றக் கவின் எழுந்து ஜன்னல் ஓரமாய் நின்று கொண்டான்.

அவன் முகம் வேதனையினை அப்பட்டமாகப் பிரதிபலிக்க... "நான் பார்த்துக்குறேன்டா.. நீ பீல் பண்ணாத... இப்போ வரலன்னு சொன்னா தப்பாகிடும். நம்ம அங்கே போய்ட்டு வந்து பார்த்துக்கலாம். அந்தப் பொண்ணுகிட்ட பேசிக்கலாம். நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத", மதி கவினின் பின்னால் வந்து அவன் தோளினை பற்றிக் கொண்டுக் கூற... கவின் திரும்பி அவனை அணைத்துக் கொண்டான்.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Donde viven las historias. Descúbrelo ahora