நேசம் 6

459 26 7
                                    


மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே எனதுள்ளம்… பெருகியதே விழி வெள்ளம் ..
விண்ணோடும் நீ தான் , மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான், வா…, ஆஆ …

இசையில் மெய் மறந்து தனது வேலையை மறந்து நின்று கொண்டிருந்தார் வசுந்தரா... வசு எனச் செல்லமாக அழைக்கப்படும் கவினின் பாட்டி.

பாடலைப் பாடி முடித்தக் கவின்...

"பூப்ப்ப்ப்......"என்று அவரின் காதருகில் கத்தினான்.

திடுமெனக் கேட்ட சப்தத்தில் அதிர்ந்தவர் அவனின் காதைத் திருகி கோவிலுக்கு அழைத்துச் செல்ல வந்தார்...

அனைவரும் சாப்பாடு மேஜையில் அமர்ந்து இருக்க...

"வசு நான் உன்னை ஈவ்னிங் பிக்கப் பன்னிக்குறேன். உதய் கிட்ட சொல்லிடு", கவின்.

"ஏன் டா... உன் ஹோம் போகல...", உதய்(கவினின் அண்ணன்).

"இல்லை டா உதய். எல்லாரும் டூர் போறாங்க... நாளைக்கு தான் வருவாங்க...", கவின்.

"நீயும் போக வேண்டியது தானப்பா... ஹேப்பி ஆ இருந்துட்டு வா...", சந்திரன்(கவின் தந்தை).

"நாளைக்கு காலேஜ்ல செமினார் இருக்குப்பா... இல்லன்னா போய்ருப்பேன்", கவின்.

"சரிப்பா.. சாப்பிட்டு கெளம்புங்க... நானும் ஆபிஸ் போய்ட்டுவறேன் வேணி.  அம்மா வறென்", சந்திரன்.

"சரிங்க...", அம்சவேணி(கவின் தாய்).

"டேய் மதி கால் பன்னான் டா. இந்த வாரம் வீக் என்டு  வீட்டுக்குவறேன் சொன்னான்", கவின்.

"என்னப்பா திடீர்னு வரான். நாம கட்டாயப் படுத்தினாலும் வரமாட்டானே. எப்படியோ நம்மல பார்க்க தோனுச்சுல... அதுவே சந்தோசம்...", வேணி.

"வரட்டும் அவன். இந்த முறை ஒரு சுத்து உடம்பு போட்டு அனுப்புறேன். அப்புறம் பாரு என் பேரன", வசு.(நாமலும் அப்படியே கூப்பிடுவோம்😉)

"பாட்டி அவன் தான் உங்க பேரன்... அப்போ உதய் யாரு?",கவின்.

"டேய்... நீ ஏன் டா.. என்னை கோர்த்து விடுற.. பாட்டி எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. நான் வறேன். பை", உதய்.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)حيث تعيش القصص. اكتشف الآن