இதழ் 9

372 24 8
                                    


"சாரி காய்ஸ். லேட் பன்னிட்டேன். வாங்க போகலாம். என்ன அப்படி பார்க்குறீங்க...", ரக்ஷி.

"இது யாரு... எங்க ரக்ஷி எங்க போனா...", நிலா.

"அழகா இருக்க ரக்ஷி.. இந்த லெஹங்கால.. நீ புடவைலயே அழகா இருப்ப.. இதுல இன்னும் அழகா தெரியுர... கியூட்", ஹம்சி.

என்றும் புடவையில் இருக்கும் ரக்ஷி இன்று லெஹங்காவில் வந்திருந்தாள்.

"யா.. ரக்ஷி", கவின்.

"நான் பயனா பிறக்காம போய்டேன்... என் கண்ணு முன்னாடி 2 தேவதை... ஆனால் ஒண்ணும் உதவாது. பயன் ஆ இருந்தா 2 பேரயும் கல்யாணம் பண்ணிப்பேன்.. நம்ம விதி", நிலா.

"ஹேய் உனக்கு என்ன டி.. நீ எங்களை விட அழகு... என்ன சொன்னாலும் உன் அழகு நாங்கள் 2 பேரும் இல்லை. நல்லா புசுபுசுனு அமுல் பேபி மாதிரி", ரக்ஷி.

"ஹம்சி மாதிரி நீயும் என்னை கிண்டல் பன்ற ரக்ஷி", நிலா.

"உண்மை சொன்னால் அவள் ஒத்துக்க மாட்டாள் ரக்ஷி", ஹம்சி.

"ஹா ஹா... சரி...சீக்கிரம் வாங்க... ஆல்ரேடி டைம் ஆச்சு", ரக்ஷி.

"டேய் என்ன டா ஆச்சு... வா... போகலாம்", கவின்.

"ம்ம்ம்... வாங்க... போகலாம்", ராம்.

கவினுக்கு போனில் அழைப்பு வர அவர்களிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றான்.

நிலா, ரக்ஷி, ஹம்சி என மூவர் உடன் ராம் வரக் கண்ட ஒரு பெண்மணி அவர்களை நோக்கி வந்தார்.

"என்ன ராம் கண்ணா... எவ்வளவு நாள் நான் உன்னை இங்கே வர சொல்லி இருக்கேன். இப்போதான் வர  தோனுச்சா.. சரி... இதுல என் மருமகள் யாரு?... மூணு பேரும் தேவதை மாதிரி இருக்கிங்கமா", லதா.

"இல்லை லதாமா... இவங்க என் ப்ரன்ட்ஸ். கவின் வெளியில இருக்கான். அவன் ப்ரன்ட் வர சொல்லி இருந்தான்", ராம்.

"ஓ... சாரிப்பா. அவங்க வரட்டும் நீங்க வாங்க... வந்து நேம் ரிஜிஸ்டேர் பண்ணுங்க...", லதா.

"ஓகேமா. வாங்க காய்ஸ்", ராம்.

அனைவரும் இவர்களிடம் நட்பாக... புது இடம் என்ற நினைவே இல்லாது பழகினர்.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)Where stories live. Discover now