💕 என்னவள் நீயே - 32 💕

1K 45 46
                                    


ஆனால் வைஷ்ணவியின் பாசத்தாலும், அக்கறையாலும் ஒரு நாள் என் தாயின் மனம் மாறும் என்ற நம்பிக்கை அவனுள் பிறந்தது.
கடவுளிற்கு தன் மனப்பாரத்தை கொடுத்துவிட்டு தன் வேலைகளை செய்து கொண்டு இருந்தான் அருண்.

" இரவு உணவு சாப்புட்டியா? மருந்து குடித்தாயா? " என்று whatsapp இல் message அனுப்பி அவளையும் கவனித்து கொண்டான் அருண்.

இரண்டாம் நாளும் அழகாக மலர,
காரில் வைஷ்ணவியை ஏற்றிக் கொண்டு அருண் ஹாஸ்பிடலை அடைந்தான்.
சற்று ஓய்வெடுத்து விட்டு நோயாளிகளின் சுகம் விசாரிக்க இருவரும் சென்றனர்.
சின்ன பிள்ளை வார்ட்டில் accident  ஒன்றில் தன் கால்களை இழந்த அந்த சின்ன சிறுமிக்கு வைஷ்ணவியென்றால் உயிர். அவளும் அது போல தான். சிலவேளைகளில் சிகிச்சைக்கு anesthesia கொடுக்கும்போது சிறுமியின் அருகே வைஷ்ணவி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற பிடிவாதமும் அந்த சிறுமிக்கு உண்டு.

அன்று,
Wheel chair இல் வந்து அவளிடம் ஒரு flower bouquet உம், சின்ன card ஒன்றும் நீட்ட, சந்தோசத்துடன் பெற்றுக் கொண்டாள் வைஷ்ணவி.
" thank you உசுரு"
" uncle தந்தாரு bouquet, நான் செய்தது இந்த card. Get well soon vaishu aunty" என்று சொல்ல,
அருணை திரும்பி பார்த்தாள் வைஷ்ணவி.
பின் "அழகாக வரைந்து இருக்க தங்கமே. So sweet of you. எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறதுமா" என்று கன்னத்தை தொட்டு, மென்மையாக கன்னத்தில் முத்தமிட்டாய் அவள்.
" card தந்ததுக்கு எனக்கு kiss பண்ண போல, uncle க்கு ஒன்றுமில்லையா?" என்று கேட்க, சற்றே அந்த சிறுமியின் கேள்வியில் ஷாக் ஆகினாள் வைஷ்ணவி. ஏன் அருணும் கூட. 
" பிறகு கொடுக்கிறேன். அது சரி தங்கமே, நானும் அருண் டாக்டரும் வேலையொன்றுக்கு வெளியூருக்கு ஒரு கிழமைக்கு போறோம். அந்த நேரம் injection போடும்போது அடம்பிடிக்க கூடாது. நல்ல பிள்ளையா பேசாம இருக்கனும். புரிதா? என் தங்கத்துக்கு அங்கிருந்து என்ன கொண்டு வர வேணும்?" என்று கேட்க,
அந்த சிறுமியோ "சரி aunty" என்று,
Chocolates, toffee, lollipop, chewgum, tipitip என்று பெரிய பட்டியலை சொல்ல, இருவரும் முகத்தை மாறி மாறி பார்த்து கொண்டு சிரித்தனர்.
வைஷ்ணவி வயது வேறுபாடு இல்லாமல் பழகுவதும், அவர்களது மனதை விரைவில் கவரும்விதமும், இந்த சின்ன சிறுமியோடு வைத்திருந்த பாசமும், நடந்துகொண்ட விதமும் அவனின் மனதை கரைய வைத்து கொண்டு இருந்தது.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now