💕 என்னவள் நீயே - 44 💕

1.1K 48 21
                                    


பகலுணவையும் அருணின் தாயிற்கு ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டாள். பின் தாயை உறங்க வைத்தவள், கை சற்று வலிக்கவே, bandage யை கழற்றிவிட்டு எண்ணெய் கொஞ்சம் தேய்த்து கொண்டாள். பிறகு முற்றத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருக்க,
வைஷ்ணவியின் தொலைபேசியும் சிணுங்கியது.

" papa, என்னடி செய்ற?" என்று அவன் கேட்க,
" baby, சும்ம தான். அம்மாவும் தூக்கம். முற்றத்துல இருக்கேன். சொல்லுங்க baby. சாப்பிட்டாயா?"
" ஆம் papa சாப்பிட்டேன். Boring ஆக இருக்கா? நீ தான் என் ரூம் பக்கம் நா இருந்தாலும் இல்லாவிட்டாலும் வர மாட்டியே. அதனால கொஞ்சம் கதைப்புத்தகங்கள நீ இருக்கிற ரூம் cupboard லாச்சியில் வைத்து இருக்கிறேன். அதை வாசி தங்கமே " என்றான்.
" baby, thanks for the caring " என்று சொல்ல,
" இப்படி thanks சொன்னால் போதாது. Kiss தா papa"
" எப்படிடா kiss பண்றது??"
" phone la kiss அடி லூசு papa" என்றதும் தாமதம் தொலைப்பேசிக்கு முத்த மழைகளை பொழிந்தாள்.

அருண் எதிர்ப்பார்த்தது ஓரிரு முத்தங்கள் ஆனால் அவளது முத்தத்தின் எண்ணிக்கைக்கு தொலைபேசி நழுவாத விடாத குறை தான். வைஷ்ணவி தன் தாயின் முன் வெளிக்காட்டிக் கொள்ளாததற்கு தன்னை எவ்வளவு miss பண்ணுகிறாள் என்று இதிலிருந்தே விளங்கிக் கொண்டான் அருண்.
"I miss you d, I miss you papa" என்றபடி அழகிய Goa நாட்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து மகிழ்ந்தனர் வைஷ்ணவியும், அருணும்.

பின் வேலையம்மாள் செய்து தந்த vegetables soup யை அறைக்குள் கொண்டு செல்ல, தாயும் விழித்திருந்தாள்.
" எழுந்து வெகு நேரமா??" என்று கேட்க,
" இல்லம்மா இப்ப தான். இங்கிருந்து பார்த்தேன் நீ ஊஞ்சலில் உட்கார்ந்து கதைப்புத்தகம் வாசித்து கொண்டு இருந்ததை. அதுதான் உன்னை தொந்தரவு செய்யவில்லைமா" என்று சொன்னார் அவர்.

ஊட்டிக் கொண்டு இருக்க, கார் சத்தம் கேட்க, அவளை அறியாமலே யன்னலின் ஊடாக எட்டிப் பார்த்தாள்.
காரை Park செய்துவிட்டு, அறை கதவின் அருகே வந்தவன்,
" fresh ஆகிவிட்டு வருகிறேன் மா " என்று சென்றான் அருண்.

பின் சற்று நேரத்தில் அருண் அறைக்குள் நுழைய, முதலில் தாயை பரிசோதித்துக் கொண்டே, வைஷ்ணவியிடம் தாயின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தான். பின்னர் வைஷ்ணவியோ இருவரையும் தனியே விட்டு விட்டு வெளியே சென்றுவிட்டாள் தனியாக தாயிடம் கதைக்க அவனுக்கும் விடயங்கள் உள்ளனவாயிருக்குமே என்று நினைத்தபடி.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now