💕 என்னவள் நீயே - 24 💕

1K 45 19
                                    


வைஷ்ணவியின் வேண்டுதல் நிறைவேற, கடவுளும் பன்னீர் துளிகளை வானிலிருந்து தெளித்து ஆசிகளை வழங்கி கொண்டிருந்தார்.
மழையின் உற்ற இரசிகையான அவளோ, சற்றே கவலையுடன் அருணின் அணைப்பிலிருந்து விலகி மழையில் நனைந்து கொண்டிருந்தாள். முகத்தை வானிற்கு காட்ட, அதுவும் சற்றே அதிகமாக மழைத்துளிகளும் பொழிய வைக்க,
" வைஷு, வா இங்கே. இப்படி நனைஞ்சா உனக்கு ஜோரம் புடிக்கும்." என்று இழுத்து கூரையின் கீழ் ஒதுங்கவும் செய்தான் அருண்.

"ஐயோ, அப்படி எல்லாம் வராது பேபி. நான் சின்ன வயசுல இருந்து மழைல ஆட்றது வழக்கம். மழை நாள்ள ஸ்கூல் விட்டு வரும்போது நல்ல நனைஞ்சுட்டு வந்து அம்மாட அடியும் வாங்குறது" என்று பழைய நாட்களை அவளும் மீட்டிக் கொண்டு இருந்தாள். அவளின் முகத்தில் வடியும் நீர் அவளின் செவ்விதழில் தேங்க, அதை கண்ட அருணிற்கு இழுத்து அவளின் இதழை சுவைக்க வேண்டும் போல இருந்தது. தன் பார்வையை உடனே விலக்கி கொண்டவன்,
" வைஷு, கூந்தல் கொஞ்சம் நனைஞ்சு இருக்கு. வா என் டவல்ல தருகிறேன். துடைத்துக்கோ" என்று மீண்டும் அவளின் முகத்தை பார்க்காமல் இழுத்து சென்றான்.
டவலால் தலையை துடைத்து, நீயும் நனைஞ்சு இருக்க என்று அவனை அமர வைத்து தன் கரத்தால் முடிகளிலிருந்த நீர்த்துளிகளை வெளியே தெளிக்க வைத்தாள்.

நேரம் 9.30 யை காட்ட,
" அருண், லேட்டாகி விட்டது. வீட்டுக்கு போகனும்" என்று சொல்ல,
மனங்களும் விருப்பமின்றி, விடைபெற தயாராகின.

" அம்மாகிட்ட சொல்லிட்டே போறனே" என்று போகும் வழியில் அறையை தட்ட,
" தூக்கம் போல வைஷு. பரவல்ல நா சொல்றேன். வா போகலாம்" என்று கார் key யை எடுத்து, அவளை முன்னால் தன் அருகில் அமர வைத்து காரை ஓட்டினான்.

தவறுதலாக வைஷ்ணவியின் கரமானது mp3 player யை தட்டிவிட,

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 
ன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன 
ன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே 

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now