💕 என்னவள் நீயே - 27 💕

1K 46 10
                                    


கடித உறையை பிரித்து பார்க்க, அது ஓர் திருமண அழைப்பிதழ்.
ஒரு இதய வடிவத்துக்குள் திருமண மகளும், திருமண மகனும் பூமாலை இட்டு, அதன் நடுவே
       ஸ்னேஹா-விஷால்
என்று அழகாக எழுதப்பட்டிருந்தது.

*********************************

அன்று மாலை வீட்டிலிருந்து கடைக்கு செல்ல அருண் வெளியே வந்தபோது, வெள்ளை நிற காரொன்று அவனது வீட்டின் முன் நிற்க, இதை எங்கேயோ கண்டிருக்கிறேனே என்று யோசிக்கும் போது ஒரு ஆணும் பெண்ணும் காரில் இருந்து இறங்கி அருணை நோக்கி வந்தனர்.

Cool glass யை கலட்டவும் தான் புரிந்தது வந்திருப்பது ஸ்னேஹாவும் விஷாலும் என்று.
"உள்ளே வாருங்கள்" என்று அழைக்க,
வீட்டை ஒருமாதிரி பார்த்துவிட்டு இருவரும் நுழைந்தனர்.
"அம்மா" என்று அருண் தாயை அழைக்க,
தாயும் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார்.

"ஆன்ட்டி சுகமா? அம்மா கொஞ்சம் பிஸி அதனால வர முடியல. ஆன்ட்டி, அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்ட wedding. நீங்க ரெண்டு பேரும் கட்டாயம் வரணும். அண்ணாவும் மாமா வேலையால ஊர்ல இல்ல. அதான் நாங்களே பத்திரிகை தர வந்தோம். டைம் ஆகுது. இன்னும் ரெண்டு மூனு இடங்களுக்கு போகனும். நாங்க போறோம்" என்று சொல்லி எழ,
" ஏதும் குடித்துவிட்டு செல்லலாமே. இருங்க 5 நிமிஷத்துல வாரேன்"என்று அருணின் தாய் சொல்லி போக முற்பட,
" இல்ல ஆன்ட்டி வர வழில தாகம்டு cool drinks குடித்துட்டு வந்தோம். Thanks ஆன்ட்டி"என்று சொன்னாள் ஸ்னேஹா.

இருவரும் கிளம்பி சென்றபின்,
" அருண், வந்தது யாரு? என்னமோ நல்ல பழக்கமா, நல்ல தெரிஞ்ச மாதிரி அந்த பொண்ணு பேசினா, எனக்கு யாருன்னு கேக்க ஒரு மாதிரி இருந்த. அதான் கேக்கல" என்று அருணின் தாய் கேட்க,
"அவ ஸ்னேஹா. ஏன் நம்ம அபினேஷ் சொந்தக்கார பிள்ள. அவங்க வீட்டுல தானே அவவும், அவட தாயும் தங்கி இருக்காங்க. " என்றபடி கல்யாண அழைப்பிதழை திறந்து பார்த்தான்.

" அபினேஷ் வீட்டுக்கு போன நேரம் இருந்த பொண்ணா அது? அந்த நேரம் சுடிதார் போட்டு இலட்சணமா இருந்தாளே. ஆனா இப்ப என்ன english காரி போல இருக்கா. மரியாதைய கூட நடந்துப்பா, இப்ப வந்ததுல இருந்து காலுக்கு மேல காலு போட்டு பெரியவங்க முன்னால பேசுறா. அவள முதல்ல கண்ட போது அவ என் மருமகளா இருந்தா நல்லா இருக்கும்னு நெனச்சேன். ஆனா இப்ப கடவுளுக்கு நன்றி சொல்றேன், ஒருவழியா நம்ம காப்பாத்திட்டான். நமக்கெல்லாம் இப்படி பட்ட மருமக சரிவராதே" என்று தாய் சொல்ல, அருணின்
மனதில் பாரமும் கூடியது.
" என்ன செய்ய? பணத்த கண்டதும் பழசெல்லாம் மறந்து, மாறிருவங்கான்னு சொன்னது உண்ம தான்மா. எல்லாம் பணத்திமிரு. சரிமா நா கடைக்கு போறேன். என்ன வேணும்" என்று கேட்டான் அருண்.
மனதில்" ஒருவேளை அன்று நான் இவளுக்கு சம்மதம் தெரிவித்தால் இவள் ஒருவேளை இப்படி மாறி இருக்க மாட்டாளா இருக்குமே? என்னால் தானா இதெல்லாம்? இல்லை ஒருவேளை என்னோடு பழகி என் சூழ்நிலையை உணர்ந்து விட்டு பிரிந்து இருப்பாளோ" யோசிக்க தொடங்கினான்.
"ஆனா இப்போ இதெல்லாம் யோசிச்சு வேலையில்லை. அவள் போய்விட்டாளே. இனி வர மாட்டாள்" என்று சமாதானம் செய்து கொண்டான் அருண்.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now