💕 என்னவள் நீயே - 35 💕

1K 47 38
                                    


அருணின் கார் புறப்பட்டு, அருணின் வீட்டு முன்னிலையில் நின்றது. தன் bags களை எடுத்துக் கொண்டு, தாயின் காலில் ஆசிர்வாதம் எடுத்துக் கொண்டு கட்டியணைத்துக் கொண்டான் அருண். காரிலிருந்து வைஷ்ணவியும் இறங்கி ஆசிர்வாதம் கேட்க அவரை நோக்கி செல்ல,
"சரி கவனமாக போய் வாடா" என்று வீட்டை நோக்கி புறப்பட்டார். வைஷ்ணவிக்கோ, அவரின் புறக்கணிப்பு மனதை புண்படுத்தியது. வழமையைப்போல இது நடக்குற விஷயம் தானே என்று மனதை ஒருவாறு சமாளித்தும் கொண்டாள்.

Bags களை காரில் ஏற்றிவிட்டு காரை செலுத்திக் கொண்டு சென்றான். இதுவரை அவளின் முகத்தில் இருந்த சிரிப்பும் மறைந்து இருந்ததை காணவே,
"என்னடி செத்த சோகத்துல வார? என்னடி நடந்தது? ஆனா என்னோட கோவாக்கு இந்த மூஞ்சோட மட்டும் வந்துராதே" என்று அருண் சொல்ல,
" ஒன்னுமில்லடா, I am okay" என்றவாறு கஷ்டப்பட்டு தன் முகத்தில் புன்னகை வரவழைத்துக் கொண்டாள். ஆனால் தலையிலோ அருணின் தாயை எப்படி என்னை விரும்ப வைப்பது? தாய்க்கு பிடிக்காததால என்ன அருண் விட்டுட்டு போய்ருவானா? அப்படியொன்றும் நடந்துவிட கூடாது" என்று கடவுளை வேண்டியபடி பெருமூச்சு விட்டாள் வைஷ்ணவி.

சில நிமிடங்களில் Airport யை இருவரும் அடைந்தனர். நேரமும் சரியாகவே begagge எல்லாம் நேரத்துடன் ஏற்றப்பட்டு, இருவரும் ஏறினர்.
சீட் number யை தேட, இருவருக்கும் அருகே அருகே seat. அருணிற்கு யன்னலோரம், வைஷ்ணவிக்கு அதன் பக்கம். வைஷ்ணவிக்கு யன்னலோரத்தை கொடுத்து சீட்டையும் மாற்றிக் கொண்டான் பெருந்தன்மையுடன்.
"this is first time, flight ல போறது பேபி. I am so excited" என்று சொல்லி, அடுத்த 5 நிமிடத்தில் plane safety பற்றி TV இல் ஒளிப்பரப்பாக, வைஷ்ணவிக்கு வயிற்றை கலக்கியது.

"பேபி, இப்படி எல்லாம் நடக்குமா?" என்று பயந்தபடி அவள் கேட்க,
" இல்லடி லூசு. அதுவும் நாம வேற நாட்டுக்கே போறதில்ல, இந்தியாக்குள்ள தானே பறக்க போறோம். அதுவும் 2மணித்தியால பயணம். அதற்கிடையில் விபத்தா? இதெல்லாம் சும்ம காட்றதுடி" என்று சொன்னான் சிரித்தபடியே அவனும்.
அவனின் பேச்சில் சற்றே தைரியமும் வரவே சீட் belt யை போட வைஷ்ணவியோ தடுமாறிக் கொண்டு இருந்தாள். அவளின் பக்கம் திரும்பியவன் தன் விரல்கள் அவளது இடையை பட்டும் படாமலும் தொட்டு சீட் belt யை அணிவித்தும் விட்டான். அவனது சிறிய சீண்டுதலோ அவளின் மனதில் பட்டாம்பூச்சிகளை பறக்க வைத்தன.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now