யோசித்தபடி இருந்த அருணும் ஸ்னேஹாவும் சிறு நேரத்தில் பாடல்களை கேட்டபடி இருவரும் உறங்கியும் போனர்.அடுத்த நாள் பிரத்யேக வகுப்பில் ஸ்னேஹாவின் கண்கள் அருணையை அடைய, அருணோ மறுத்தான். அவளை கண்டதும் நேற்று நடந்த சம்பவமே நினைவுக்கு வந்தது. ஸ்னேஹா "அருண்" என்று பேசியதும் அவனின் காதை அடைய முதல் மின்னல் வேகத்தில் பறந்து சென்றான். இவ்வாறு தினமும் நடைபெற இருவருக்கும் இடையில் பேச்சும் நின்று போனது. அருணின் நிராகரிப்பு ஸ்னேஹாவின் மனதை துண்டு துண்டாக்கியது. அதேபோல் அருணிற்கும் அவளது முகத்தை பார்க்க முடியாமல் போனது.
அன்றிரவு இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தோடு,
" hai arun, I am sneha" என்ற குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தாள்.
அடிக்கடி whatsapp சென்று அந்த ஒற்றை tick இரண்டாக மாறி, நீல நிறமாகவும் வரை காத்திருந்தாள். Last seen இன்னும் மாலை நேரமான 5. 32
காட்டிக் கொண்டிருந்தது. அவ்வாறு பார்த்துக் கொண்டு இருந்த அவளை தன்னை அறியாமலே தூக்கமும் கட்டியணைத்துக் கொண்டது." ஸ்னேஹா, ஸ்னேஹா எழுந்திரு" என்று தாய் எழுப்பாட்ட,
கண்ணை திறந்து பார்த்துவிட்டு அடுத்த பக்கம் திரும்பி உறங்கினாள் பேதை.அந்நேரம் ஸ்னேஹாவின் தொலைபேசி சிணுங்க, அவ்வளவு நேரம் தட்டி எழுப்பியும் எழாத ஸ்னேஹா கட்டிலில் எழுந்தமர்ந்து கண்களை சிமிட்டி யார் message அனுப்பியது என்று பார்த்தாள்.
" அருண் " என்று வரவே, chat யை திறந்து பார்த்தாள்."இவ்வளவு நேரமும் அடித்து எழுப்ப என்னால் முடியவில்லை. ஆனால் உன் தொலைபேசி சத்தம் உன்னை எழுப்பியதே. இனி அதனிடமே எழுப்பிவிட சொல்லு" கோபத்தில் ஏசியபடி தொலைபேசியை பார்த்து காலையிலே சிரித்து கொண்டு இருந்த மகளை பார்த்து தலையில் அடித்தபடி சென்றுவிட்டார் அந்த தாய்.
" sollu sneha" என்று வரவே,
" I want to talk with you" என்ற செய்தியை அனுப்பும்போது அவன் online இல் இல்லை. அதனை கண்ட ஸ்னேஹாவிற்கு கடுப்பாகியது. வந்து கொஞ்ச நேரம் online இல் இருந்தால் தான் என்னவாம்? பெரிய பிஸி போல என்று மனதில் அருணிற்கு திட்டிக் கொண்டு, எழுந்து தன்னை தயார்படுத்திக் கொண்டு 1000 தடவை whatsapp இல் நுழைந்து அவனின் chat இனுள்ளே சென்று last seen யை பார்த்தாள். அது காலையில் அவளுக்கு பதிலளித்த நேரத்தை காட்டிக்கொண்டு இருந்தது.
பேருந்தில் ஜன்னலோரத்தில் அவள் அமர, தென்றலும் அவளது கன்னங்களை வருட தன்னையறியாமல் அருணின் நினைவில் மூழ்கிப்போனாள்.
சிறு நேரத்தில் சகபாடியின் தட்டலில் உலகிற்கு வந்தாள். பேருந்தில் இருந்து இறங்கி, நண்பர்களுடன் கதையளந்து கொண்டு இருக்க நேரம் போனதும் விளங்கவில்லை.
பாட இடைவேளை நேரத்தில் சாப்பிட்டுக்கொண்டு தொலைபேசியை நோண்ட,
அங்கே காத்திருந்த அருணின் பதிலும் வந்திருந்தது.
"sorry. Today I will be busy" என்ற பதிலை கண்டதும் மலர்ந்திருந்த அவளது முகமும் வாடிப்போயிற்று.
YOU ARE READING
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
Romanceதன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 க...