குளித்துவிட்டு அருணும் வரவே,
"என்னடி வைஷு, போக ஐடியாவே இல்லையா?" என்று கேட்க,
"இல்ல பேபி, என்ன dress பண்றன்னு ஒரே confused" என்றபடி அருணை பார்த்தாள்.
அருணோ சிவப்பு, கறுப்பு கலந்த long sleeve tshirt அணிந்து இருந்தான்.
உடனே, அவளும் black denim, red top ஒன்றையும் எடுத்துக் கொண்டு குளியலறைக்கு விரைந்து, அணிந்து கொண்டு வந்தாள்."5mins தா பேபி" என்று eyeliner யையும், lip barm உம் மட்டும் பூசியபடி தலையை லூசாக விரித்து விட்டு,
"சரி போகலாம் பேபி" என்றாள்.
"பெண்கள் என்றால் dress பண்ண மணித்தியால கணக்கு எடுப்பாங்கன்னு அறிந்து இருக்கேன் ஆனா இவ அப்படி இல்லையே" என்று மனதால் பெருமைப்பட்டும் கொண்டான்.அருகில் இருந்த கடற்கரைக்கு முதலில் சென்றனர். கடல் மண்ணில் இருவர்களின் காலடிகள் பதிய, இரு கைகளும் உரசியபடி வந்தது.
" do you love boating?" என்று அருண் கேட்க ,
" தூரத்துல இருந்து பார்த்து இருக்கேன். ஆனா போனதில்ல"
"சரி இன்டைக்கு என் கூட போகலாம். வாரீயா?" என்று அவன் கேட்க,
" ஐயோ பயம் பேபி. கடல் நடுவுல boat கவிழ்ந்து விட்டா என்ன பண்றது? வாழ வேண்டிய வயசுடா. திமிங்கிலம், சுறா எல்லாம் இருக்குமே" என்று மனதில் வந்ததை எல்லாம் அடிக்கிக்கொண்டு போக,
"டி, நீ எல்லாம் adventures க்கு set ஏ ஆக மாட்டா. But I love adventures" என்றதும்,
"தன்னவனிற்கு பிடித்துள்ளதே. சரி போகலாம். இப்பவே தைரியத்த வரவைத்து கொள்ளனும் . அப்ப தான் Future ல உதவும்" என்று மனதிடம் சொல்லிக் கொண்டு,
"சரிடா போகலாம்" என்று வைஷ்ணவியும் சொன்னாள்."இப்ப தானே முடியாதுன்னு சொன்னா. எனக்காக வருகிறாள் போல. என்னடி எனக்காக எவ்வளவு risk வேணுமாலும் எடுப்பியா? " என்று அவளது காதலில் சற்றே கரைந்தான் அருண்.
Boat இல் ஏறி, safety கான ஆடையை அணிந்து கொள்ள, சற்றே பயத்துடன் வைஷ்ணவியும் பயணிக்க தயாரானாள். சற்றே தூரம் செல்ல காற்றின் இதமும், boat யில் காலுக்கடியில் இருந்த glass இனை நோக்க, சிப்பிகளும், வகைவகையான மீன்களும், அழகிய முருகைக்கற்களும் கண்களோடு மனதையும் சேர்த்து கவர்ந்து கொண்டு வந்தன. Boat இலுருந்து கைகளை வெளியே நீட்டி, மென்மையான அலைகளோடும் விளையாடினாள். சிலநேரங்களில் மீன்களும் வந்து அவளது மென்மையான கரங்களை முத்தமிட்டு சென்றன. வைஷ்ணவி சந்தோசமடையும் தருணங்களை பார்த்து தன் மனதிலும், கையடக்கத் தொலைபேசியில் படங்களாக பிடித்து வைத்தான் அருண். சூரியன் மறையும் தருணமும் boat இல் இருந்து பார்க்க மனதில் நிம்மதியை உணர்ந்தனர்.
YOU ARE READING
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
Romanceதன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 க...