💕 என்னவள் நீயே - 14 💕

1.1K 40 5
                                    


"இன்றோடு உங்களுக்கான syllabus முடிந்துவிட்டது. ஏதும் தேவையென்றால், ஏதும் doubts இருந்தால் எனக்கு அழையுங்கள். Thanks for your supporting. Do your exam very well. Expecting a good results " என்று சொல்ல அருணிற்கு நன்றி சொல்லி, கூட்டை களைந்து செல்லும் குருவிகள் போல எல்லோரும் கிளம்பி சென்றனர்.

இன்று தான் இவளை பார்க்கும் கடைசி நாள் என்று அவளோடு பேச போக, அவளோ விறுவிறு என்று அருணை கண்டும் காணாததுபோல நடந்து போனாள். எனவே, தோல்வியோடு அவனும் தன் பைக் இருக்கும் இடத்தை அடைந்தான். பஸ் தரிப்பிடத்தை பாதையை கடந்தே போகவேண்டும். யோசனையுடன் பாதையை மாறிக் கொண்டிருந்த ஸ்னேஹாவை கண்ட அருண் "ஸ்னேஹா, ஸ்னேஹா" என்று கத்தினாலும் அவள் காதுகளில் அவனின் கூவல் சென்றடையவில்லை.

ஹோர்ன் சத்தம் அதிகமாக கேட்கவே ஸ்னேஹா திரும்பி பார்க்க, அவள் அருகில் லொரி ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்ததை கண்டாள். செய்வதறியாது காதுகளை பொத்தி கண்களை மூடிக் கொண்ட ஸ்னேஹாவை ஓர் வலிய கரம் பிடித்து இழுக்க, அவனின் மார்பில் விழுந்தாள்.
அவளை கட்டியணைத்து, " இப்போது பயப்பட தேவையில்லை ஸ்னேஹா. ஏன் இவ்வளவு கவனயீனமாக நடந்து கொள்கிறாய்? இனிமேல் கொஞ்சம் பார்த்து கவனமாக நடந்துகொள். நான் இங்கு இல்லையென்றால் உன் நிலைமை என்னவாகி இருக்கும்? உனக்கு என்ன அவ்வளவு யோசனை? உன்னையே நீ தண்டித்துக் கொள்ள போகிறாயா? உன்னை கண்டு உன் தாயும், உன்னை சுற்றி இருக்கும் உன் குடும்பமும் வருந்துவதை கண்டு மகிழ்வாயா? இனி இவ்வாறு பைத்தியக்காரத்தனம் நடந்து கொள்ளாதே. நானும் நன்றாக பயந்துவிட்டேன். நீ என்... " என்று சொன்னபடி நெற்றியில் விழுந்த முடியை காதில் சொறுக முற்பட,
இது எங்கோ கேட்ட பரீட்சையமான குரலே என்று நிமிர்ந்து பார்த்தாள்.

" how dare are you touch me? " என்று அணைப்பிலிருந்து விலகி அவனை தள்ளி விட்டாள்.
" உயிரை காப்பாற்றியமைக்கு ஓர் நன்றி கூடவா சொல்லிக் கூடாது? " அவனும் கேட்க,
" உயிர் பிழைக்காமல் இறந்து இருந்தால் நன்றி கூறியிருப்பேன்" என்று கண்கள் சிவக்க சொன்னாள் அவளும்.
" ஸ்னேஹா, இப்படி பேசாதே"
" நீ தானே என்னை காதலிக்கவில்லை. இப்போது என்ன தீடீர் அக்கறை? நான் உயிரோடு இருந்தால் என்ன? இல்லாவிட்டால் உனக்கென்ன? என்னை காப்பாற்றி கட்டியணைத்ததும் உன் நண்பனின் தங்கை என்ற முறையில் தானே? " என்று கோபத்தின் உச்சியிலிருந்து கொட்டி தீர்த்தாள்.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now