" இவள்ட பேர் நமக்கு என்னத்துக்கு? தெரிந்த கொள்ள அவசியம் எமக்கில்லை. இது என்னோடு வீடு. how dare you come in?? Get out" என்று அருணின் தாய் கத்த,
" அம்மா, எனக்கு வேண்டப்பட்டவர் என்று தெரிந்தா இப்படி பேசுற?
நா தான் இவள dinner க்கு வர சொன்னேன். ஒழுங்கா பேசும்மா" என்றான் அருண்." அத்த அன்டைக்கே வந்து சொன்னனே இவள பத்தி. நீங்க தான் உங்க மகன கடவுளா நம்பின. இப்ப என்ன நடந்தது? நேத்து என்ன கூட்டிட்டு போகமா இருந்ததுக்கு இவ தான் காரணம்" என்று அனிதா வாய்க்கு வந்தவாறு திட்ட தொடங்கினாள்.
" my sweetheart, நீ இதெல்லாம் தலையில் போட்டுக் கொள்ளாதே " என்று கையை அழுத்த,
" ஆவ் பேபி " என்று கத்தினாள்.
ஏன் என்று பார்த்தபோது தான் கண்டான் வலது கையில் மருந்து கட்டு ஒன்று கட்டப்பட்டு இருந்ததை." வைஷு, என்னடி இது? நான் வீட்டுக்கு வரும்வரை நல்லா தானே இருந்த. என்ன நடந்த? "
" ஐயோ அருண், இது சின்ன காயம். அந்த 15 ம் வார்ட்டுக்கு பின்னால கொஞ்சம் கண்ணாடித்துண்டுகள் வீதில இருந்தத கண்டேன். வேலை செய்யும் யாரையும் கூப்பிட்டேன், ஆனா வரல்ல. அதான் நானே செஞ்சேன். நோயாளி ஒருவர் வருவதை கண்டு அவசரமா clean செய்தேன். அதில் ஒரு சின்ன துண்டு கையை துளைத்தது. மஹா மருந்து போட்டுவிட்டாள். வலி ஒன்றும் இல்லை " என்று வைஷ்ணவி சிரித்து கொண்டே சொல்ல,
" ஏன் இவ்வளவு careless ஆக இருக்க? எப்பவும் ஏதாவது தேடி கொள்ற. பின்னால இருந்து உன்ன என் சின்ன பாப்பாவ வாழ்க்க பூரா பாத்துக்கனும் போல" என்று அருண் சொன்னான்.
அருண் சொன்ன கடைசி வரி எல்லோரின் முன்னால் காதலியாக தன்னை வெளிப்படுத்த சொன்னானா? இல்லை உண்மையாக ஆழ் மனதிலிருந்து சொன்னானா? என்று ஒரு கணம் குழம்பிப் போனாள் வைஷ்ணவி." wait தங்கம்" என்று சொல்லி தன்னறைக்கு சென்றான்.
இதுதான் சந்தர்ப்பம் என்று அறிந்த மூவரும் சேர்ந்து அவளை திட்டி தீர்த்து விரட்டப்போனாலும், அவளோ தன் பாட்டில் தொலைபேசியை தட்டிக் கொண்டு இருந்தாள்.
ஏற்கனவே இவர்களை பற்றி அருண் சொல்லி இருந்ததால் சில வேளையில் மனம் நொந்தாலும் தன்னை தானே சமாளித்தும் கொண்டாள்.
أنت تقرأ
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
عاطفيةதன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 க...