அருண் ஸ்னேஹாவின் கைகளை பற்றி, மோதிரத்தை பார்க்கவே,
" அருண், I am engaged"
" what??"
" ஆம், நீ தான் என்னை வேண்டாம் என்று சொல்லி துரத்தினாயே. பல நாட்கள் அழுதேன். உன்னை மறக்க பல வழிகளில் முயன்றேன். ஒரு வழியாக Exam முடிந்ததும் என்னை தேடி ஒரு வரன் வந்தது.
நல்ல rich guy, 6 அடி உயரமான gym body உடன் ஓர் ஆணழகன், வசதிக்கேற்ப dressing style, குடும்பமும் western type, தனி தனி நபருக்கும் தனி தனி கார். பார்த்ததும் பிடித்துவிட்டது. இனி சுசியை பார்த்து பொறாமைப்பட தேவையில்லை. அவளை விட எனக்கு வசதி அதிகம்.காலேஜிற்கு இப்படி வருவது தான் என் ஜேயிற்கு பிடிக்கும். So I don't care about what you say. இனி அருண் உன் பேச்சுக்கள் என்னிடம் செல்லுபடியாகாது. By the way, thanks for rejecting me, நீ என்னை reject செய்யாவிட்டால் இவ்வளவு நல்ல வாழ்க்கை எனக்கு கிடைத்து இருக்குமா?
நீ பிடித்து பார்த்த மோதிரம் தான் எங்களது engage ring. Simple ஆகவும் அவசரத்தில் வாங்கியதாம். இப்போதைக்கு போட்டுக் கொள்ள சொன்னார்" என்று சொல்லவும் சிதறும் சத்தமொன்று மெல்லியதாக கேட்டது. அது வேறு ஒன்றுமில்லை அருண் ஸ்னேஹா மேல் காதல் கொண்ட இதயமே. இந்த சிறிய காலத்திற்குள் இவ்வளவு ஸ்னேஹாவின் மாற்றமா? நான் பழகிய ஸ்னேஹா இவள் இல்லையே என்று மட்டும் மனம் சொல்லியது.
தன் புராணத்தை பேசிக் கொண்டு இருக்கும்போது சற்றே அருணின் தந்தைக்காகவும் ஓர் சில நிமிடம் கவலைப்படவும் செய்தாள். தொலைபேசியை காதில் வைத்து பேச, தொலைபேசியின் பின்புறம் I - phone சின்னம் அருணின் கண்ணில் மின்னலைப் போன்று பிடுங்கிக் சென்றது.
Call பேசி 5 நிமிடங்களில்,
அருணிற்கும் ஸ்னேஹாவிற்கும் முன்னால் வெள்ளை நிற கார் ஒன்று வந்து நின்றது. காரின் யன்னலை திறந்து ஸ்னேஹாவை உள்ளே அழைத்தான் கறுப்பு கூல் கிலாஸ் போட்டிருந்த ஒரு ஆண்.இவளோ அவனை இறங்கி வர சொல்ல, காரை நிறுத்தி விட்டு அவ்விடம் வந்தான் அந்த ஆண்.
ஆறடி உயரம் கொண்ட iron நொறுங்காத ஷர்ட் உம் trouser உம் நன்றாக polish செய்த சப்பாத்தும் அணிந்து, ஸ்டில்லாக கூல் glass யை கழற்ற அவனின் பணத்திமிர் பார்வையால் தெரிந்தது. அருணை கண்டு முகத்தை சுளித்தவன், தன் தகுதிக்கேற்போரோடு மட்டும் பழகும் தன்மை கொண்டவன் என்றும் உணர்த்தியது.
" ஹாய் my beauty" என்றபடி ஸ்னேஹாவை கீழிருந்து மேலாக அணு அணுவாக நோக்குவதை கண்ட அருணிற்கு மனம் ஏனோ பிசைந்துக் கொண்டிருந்தது.
" ஸ்னேஹா, இன்று ரொம்ப அழகாக இருக்கிறடி"
" aww thanks darling" என்று முகம் சிவந்தாள் ஸ்னேஹா.
YOU ARE READING
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
Romanceதன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 க...