💕 என்னவள் நீயே - 17 💕

1.1K 44 2
                                    


" அருண், அருண், library க்கு போகும் time பிந்துகிறதே. இன்னும் போகவில்லையா? " என்று தாயின் சத்தம் கேட்க,
கண்களை திறந்து பார்த்தான் அருண்.

" நான் எங்கே இருக்கிறேன்? நான் cafe இல் ஸ்னேஹாவோடு தானே இருந்தேன்? இங்கு எப்போது வந்தேன்? அப்போ நான் கண்டது கனவா? நான் அவளோடு பேசியதெல்லாம் கனவா?" கனவு என்று மனம் சொன்னாலும், ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னை கிள்ளிப் பார்த்தான். இது தான் நிஜம், நான் வீட்டில் தான் இருக்கிறேன். அது வெறும் கனவு என்று புலப்பட சில கணங்களே எடுத்தன. மனமும் கணமாக, தன்னை தயார் செய்து நூலகம் நோக்கி சென்றான்.
என் கனவு போல இந்த Cafe க்கு அவள் வர மாட்டாளா? என்று பேராசை கொண்டு ஏங்கவும் தொடங்கியது.

அன்று பிறந்த நாள் கேக் ஆடர் ஒன்று வரவே,  happy birthday என்று கேக்கில் எழுத அருணை கூப்பிட்டான் அங்கு கேக் செய்கின்ற சகோதரன்.
"சகோ, கொஞ்சம் எழுதித்தர முடியுமா? எழுத்து cutter யை அவசரத்துக்கு காணல"
" சரி " என்று அவனின் அழகான ஆங்கில எழுத்தில் happy birthday என்று எழுதினான்.
" கீழே, sneha என்றும் எழுதிவிடே" என்று சொல்ல,
அந்த பெயரை கேட்டு சற்றே திகைத்தான். உடனே காலண்டரை பார்க்க, April 15 யை காட்ட, இந்த ஸ்னேஹா என் ஸ்னேஹா இல்லையே என்றும் வருந்தினாலும் அந்த பெயரை மிகுந்த காதலுடன் எழுதினான் அருண்.

இரண்டு மாதங்களுக்கு முன்,
அன்று February 24. February 25 ஸ்னேஹாவின் பிறந்த நாள் என்று அருணிற்கு நன்கு தெரியும். அவளும் அருணின் birthday wish யை ரொம்ப எதிர்ப்பார்க்கிறாள் என்றதை தன் பிறந்த நாளை அருணிற்கு நினைவுப்படுத்த அடிக்கடி ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பாள். இரவு 12 மணிக்கு என் Wish தான் முதல் wish ஆக செல்ல வேண்டும் என்ற ஆவல் அருண் கொண்டாலும், அன்று களைப்பால் உறங்கியும் போனான்.
காலையில் எழுந்த அருணிற்கு வேலைப்பளுவால் ஸ்னேஹாவின் பிறந்த நாள் என்பது சுத்தமாக மறந்துபோனது. அன்று வழமைக்கு போல கற்பிக்க சென்ற அருணிடம்,
"சேர், இன்று கற்பிக்க வேண்டாமே. முழு நாளும் கேக் cut பண்ண எவ்வளவு நேரம் வெயிட் பண்ணோம் சேர். இன்று free ஏ கிடைக்கல. Please sir. எமது வகுப்பு தலைவிட பிறந்த நாள் என்பதால் கொண்டாடியே ஆகவேண்டும்" என்று கெஞ்ச,
அருணும் "சரி" என்று தலை அசைத்தான்.
"Thanks sir" என்று தெரிவித்து, அவனது இருப்பிடத்தில் அமர்ந்து, அருண் assignment திருத்திக் கொண்டு இருந்தான்.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Dove le storie prendono vita. Scoprilo ora