💕 என்னவள் நீயே - 05 💕

2.3K 63 7
                                    


தேநீர் கப்புடன் வைஷ்ணவி நுழைய, நோயாளிகளின் உடல் நிலையை எல்லாம் பயப்படும் வகையில் ஏதும் இல்லை என்பதால்,
" வைஷ்ணவி, today morning duty க்கு தாதிமார்கள் வந்துவிட்டார்களா? எத்தனை பேர்?" என்று கேள்வி கேட்க, கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தாள் வைஷ்ணவி.
"லீவில் உள்ளவர்களையும் அழைத்து நேற்று காலையிலிருந்து இரவு வரை வேலை செய்தவர்களுக்கு வீட்டுக்கு செல்ல சொல்லு. நீயும் ரொம்ப கஷ்டப்பட்டாயே. இரவு தூங்காமல். நீயும் வீட்டுக்கு சென்று rest எடு" என்று டாக்டர் அருண் பணித்தார்.

தான் மட்டும் வீட்டுக்கு செல்வதா? டாக்டரை விட்டு பிரிய மனமின்றி,
" டாக்டர் யாரும் critical conditions இல் இல்லையே. நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. தேவையென்றால் call எடுக்க சொல்லுகிறேன் மஹாவிற்கு. இன்று காலையில் தான் duty க்கு வந்தாள்"
முதலில் மறுத்த அருண் டாக்டரும் செல்ல தயாராகினார்.

வெயிலும் தலையை பிளப்பது போல் அடிக்க தொடங்கியது. வேலை களைப்பு ஒரு பக்கம். நடந்து சென்றால் தலைச்சுற்றி விழுந்துவிடுவேனோ என்ற பயத்தில் வீதியில் செல்கின்ற ஆட்டோக்களிற்கு கை நீட்டி நிறுத்த முற்பட்டாலும் யாரும் நிறுத்திய பாடில்லை.
அதற்கு மாறாக ஒரு கார் வந்து வைஷ்ணவியின் முன் வந்து நின்றது.
யன்னலை திறந்து,
கை சமிக்ஞையால் அவனும் அழைக்க வேறுவழியின்றி அவளும் காரின் கதவை திறந்து ஏறினாள்.

" டாக்டர், உங்களுக்கு என்னால் ஏன் வீண்சிரமம்? நான் கொஞ்சம் இருந்தால் ஆட்டோ வந்து இருக்குமே" என்று சொல்ல,
" வைஷ்ணவி, இந்த ஆட்டோக்காரர்களை உனக்கு இதற்கு முன்னே தெரியுமா?"
" இல்லை" என்று தலையை குனித்தபடி சொன்னாள்.
" உன் பாதுகாப்பை பற்றி நீ கொஞ்சம் யோசிக்க கூடாதா வைஷ்ணவி? நீயும் வேலைக்காக இங்கே வந்திருக்கிறாய் என்று அறிந்தேன். பார்ப்பதற்கு நல்லவர்கள் மாதிரி இருந்தாலும் உள்ளே எப்படிப்பட்டவர்கள் என்று எமக்கு தெரியாமல் மதிப்படாதே. So be careful "
" டாக்டர்"
" ம்ம்ம், என்ன சொல்லு"
" உங்களை நம்பலாமா? பார்க்க நீங்களும் தான் ரொம்ப நல்லவர் போல் இருக்கிறீர்கள். உள்ளே ரொம்ப பொல்லாதவரோ? கெட்டவரோ? " என்று வைஷ்ணவி நக்கலாக கேட்க,
" என்னையும் சேர்த்து தான் சொன்னேன். என்னிடமும் எதற்கும் கவனமாக இரு " என்று சிரிக்க,
அருணின் பல்வரிசையில் சிறிய இடங்களால் வந்த வெளிச்சமும், அவனது புன்னகையால் தான் இருக்கும் உலகையே மறந்தாள் வைஷு.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ