" வைஷு, போகலாம் " என்று சொல்லவும், வைஷ்ணவி தன் traveling bag களை எடுக்க, அருண் அதை கைகளால் எடுத்தான்.
அருணின் தாயின் அறைக்குள் சென்ற வைஷ்ணவி,
" Aunty போய் வருகிறேன். என்னால ஏதாவது தவறுகள் நடந்து இருந்தால் மன்னித்துவிடுங்கள். எனக்கு ஆசிர்வாதம் பண்ணுங்கள் " என்று கட்டிலில் அமர்ந்திருந்த அருணின் தாயின் கால்களை பிடித்தாள். முதன்முதலாக அன்று அவளை எழுப்பாட்டி கட்டியணைத்தார் அருணின் தாயார்.
" சரி மா, போய் வா " என்றார். இந்த அணைப்பு நான் போகின்றேன் என்ற சந்தோசத்தில் தருகிறாரோ என்றும் மனம் சந்தேகத்தை கிளப்பியது." அம்மா, இவங்கள வீட்டுல விட்டுட்டு வாரேன் " என்று காரில் அழைத்து கொண்டு சென்றான் அருண். அவர்களை வீட்டில் விட்டு மனமே இன்றி தன் வீட்டையும் அடைந்தான். போனதும் தந்தைக்கு உணவை பரிமாறியவள்,
"அப்பா, பசியில்ல, நா தூங்குறேன்" என்று அறைக்குள் புகுந்து கொண்டாள் வைஷ்ணவி. என் தந்தையோடு அருணின் அம்மா என்ன பேசி இருப்பாங்க? என்று யோசித்தபடியே அன்றிரவு உறங்கியும் போனாள்.காலையும் அழகாக மலர,
வைஷ்ணவியின் தந்தை ஊருக்கு செல்ல தயாராகி கொண்டு இருந்தார்.
" அப்பா, ஏன் தீடீரென ஊர் பக்கம் போறீங்க? "
" இல்ல, முக்கியமான வேலை ஒன்று. கட்டாயம் போக வேண்டும்" என்று சொல்லிவிட்டு "பஸ்ஸிற்கு லேட்டாகுது வைஷு, இன்று நைட்கு கொஞ்சம் மஹாவ இங்க தங்க சொல்லே" என்று சொல்லிவிட்டு அவசரத்தில் போனார்.
"அப்பா, கவனம். கவனமா போய் வாருங்க. நா என்னை பத்தி பார்த்து கொள்கிறேன்" என்று சொல்லியபடி அவளும் ஹாஸ்பிடலுக்கு செல்ல தயாரானாள்.கதவை மூடிக் கொண்டு வெளியேற அதே நேரத்தில் கார் ஹோனும் கேட்டது. வந்திருந்தது அருணின் கார். வா என்று அவன் சைகையால் அழைக்க, அவளும் வந்து அமர்ந்தாள்.
" good morning papa. எத்தன தடவ call பண்றேன் லூசு, எடுக்கவே இல்ல? எத்தனை message பண்ணினேன். அதையும் பார்த்தில்ல. வர வர என்னை நீ கவனிக்கிறதே இல்ல" என்று பொய்யாக குற்றம் சாற்றினான் அருண்.
" ஐயோ, sorry da. வந்ததும் தூங்கிவிட்டேன். Phone வேற silence ல. அதான் கேக்கல. இரண்டு மாதம் வீட்டுல இல்லாட்டி வீட்டு நிலைமை என்ன என்று உனக்கு தெரியுமே baby. Phone பார்க்க நேரம் கிடைக்கவில்லை. எல்லாம் clean பண்ணிட்டு இருந்தேன். Sorry da, sorry tangam, sorry chellam, forgive me da" என்று வைஷ்ணவி சொல்ல,
" அப்படி எல்லாம் மன்னிக்க முடியாது. எனக்கு kiss ஒன்னு பண்ணுடி" என்றான்.
" என்னடா நடக்குது? என் பேபிக்கு ஒரே kiss கேக்குது? தப்பாச்சே " என்றாள் சிரித்தபடியே.
" எல்லாம் வயசு கோளாறுடி. கல்யாணம் பண்ற வயசும் சரியே" என்றான் கண்ணடித்தபடி.
அவனின் ஓட்டும் கையை தவிர்த்து மற்றைய கையை தன் கை சிறைக்குள் எடுத்தவள் மென்மையாக தன் இதழால் முத்தமிட்டாள். ஆனால் இது கடைசி முத்தமோ என்று negative thoughts யை மனமோ வரவழைக்க சற்றே துடிதுடித்துப் போனாள்.
YOU ARE READING
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
Romanceதன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 க...