" எக்யூஸ் மீ, எங்க ரெஸ்ட் ரூம் இருக்குது?" என்று அந்த மாது கேட்க,
அங்கே வேலை செய்யும் அம்மாள் போகும் வழியை காட்டவே, அவ்விடத்தை சென்றடைந்தாள்.கதவை மெதுவாக தட்டி அனுமதி கேட்கவே, சத்தமாக இருந்த அவ்வறை அமைதியானது. எல்லாரும் அவளை திரும்பி பார்க்கவே அவளுக்கு ஏதோ போல் இருந்ததாலும் அறையை நோட்டமிட்டாள்.
அறை சற்று பெரிதாக, நடுவில் ஓர் பெரிய மேசை, அதை சுற்றி கதிரைகளும், ஒரு ஓரத்தில் சிறிய சிங்க் ஒன்றும், சின்ன கதவு ஒன்று ஒரு மூலையில் இருக்க அது வொஷ்ரூம் என்று ஊகித்துக் கொண்டாள். தன்னை பார்ப்போரையும் சற்று நோக்கினாள். அதில் 40 வயது மதிக்கத்தக்க ஓரிரு பெண்களும், தன் வயதை ஒட்டிய நான்கைந்து யுவதிகளும், ஓரளவு வயதான ஆண்களும் இருந்தனர்.
மொத்தமாக அந்த அறையில் பத்து பேர் இருந்தனர்.சற்று உயரம் குறைந்த, அளவான உடம்பு, நேர்த்தியாக ஐயன் செய்த முழங்கால்களுக்கும் கீழான நீட்டமான வெள்ளை சீருடை, வெள்ளை சொக்ஸ், பாலிஷ் செய்யப்பட்ட ஷூக்கள், சற்று காதிற்கு கீழ் தலை முடியானது தேய்ந்து நின்றது. நாகரிக பெண்ணாக அவளின் தோற்றம் இருந்தாலும் அவள் அணிந்து வந்த சீருடை அவளின் ஒழுக்கத்தை பறை சாற்றியது.
" வாம்மா. பார்க்க புதிய ஆளாக தெரிகிறாய். இன்று தான் வேலைக்கு சேர்ந்தாய் போல. உன் பெயர் என்ன?" என்று கரிசனையுடன் கேட்ட அந்த அம்மாளை ஒரு நிமிடத்தில் அவளுக்கு பிடித்து போய்விட்டது.
" என் பெயர்..." என்று கூற முற்படும்போது கதவு வேகமாக திறக்கப்பட, அறையில் இருந்த எல்லோரும் எழவே, எல்லோரினது முகத்திலும் பயமும், பதற்றமும் ரேகை படர்ந்தது. இவற்றை கண்டு அவளும் சற்றே திரும்பிப் பார்க்க,
உயரமான, ஓர் கட்டான உடம்புடன், அழகும் நேர்த்தியுமாக சீருடை அணிந்து, முகத்தில் சிரிப்பு சாரல் கூட கொஞ்சமும் இல்லாமல்,
" யார் வைஷ்ணவி??" என்று வினவ, அவளும் முன்னோக்கி சென்று நின்றாள்." இன்று தானே வேலைக்கு சேர்ந்து இருக்கிறாய். இந்த வைத்தியசாலையின் தாதிமார்களின் ரூல்ஸ் அன்ட் ரெக்யூலெஷன் பற்றி இவர்களிடம் விசாரிங்க. உனக்கான வசிப்பிடத்தை ராகவி காட்டுவாள். நீ, நாளையும் இருந்து விமலா தாதியின் கீழ் 6 மாதத்திற்கு இமெஜன்ஸி வார்டில் வேலை செய்ய வேண்டும்" என்று தகவலை மட்டும் கூறி அவளின் எந்த பதிலுக்கும் காத்திருக்காமல் சென்றுவிட்டார்.
YOU ARE READING
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
Romanceதன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 க...