💕 என்னவள் நீயே - 43 💕

1K 46 21
                                    


அருணின் தாயை கூட்டி வந்து கட்டிலில் இருக்க வைக்க, அருணும் அறையில் தன் தாயிற்காக காத்துக் கொண்டு இருந்தான். வேலையம்மாளும் அவரின் உணவையும் கொண்டு வரவே, "வைஷு, நான் இருக்கேனே. நான் ஊட்டிவிடுகிறேன். நீ போய் சாப்பிடு" என்று அருணும் சொல்ல, தாயிற்கும் மகனுக்கும் பேச இடமளித்துவிட்டு,
" தேவை எதுவும் இருந்தால் கூப்பிடுங்கள்" என்று விரைந்தாள்.

வேலையம்மாளுடன் ஏற்கனவே இருந்த பழக்கத்தால் அவருடன் சேர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, " டாக்டர் சாப்பிட்டாரா? " என்றும் தன்னவனை பற்றி கேட்டும் கொண்டாள். அவன் சாப்பிட்டான் என்ற பின்னே அவளுக்கும் சாப்பாடு தொண்டைக்குழிக்குள் இறங்கியது.
பின், பகலுணவு சமையலுக்கு வேலையம்மாளுக்கு உதவி செய்தாள் வைஷ்ணவி.
" வைஷ்ணவி, பேசாம இருமா, நான் எல்லாத்தையும் செய்றேன். உங்க கையோட இந்த வேல எல்லாம் எதுக்கு மா செய்ற, boring ன்டா கொஞ்சம் டிவி பாருங்க" என்று அந்த வேலையம்மாளும் சொன்னார்.

" நான் இங்க வந்தது relax ஆகி comfortable ஆக இருக்க இல்லம்மா. அம்மாவ பார்த்துக் கொள்ளவே. கொஞ்சம் எனக்கு இயலுமான உதவிகள செயறேனே, please " என்று அவர் சொல்வதை கேட்காமல் செய்தும் கொடுத்தாள்.

தாயுடன் பேசிவிட்டு அறையிலிருந்து வெளியே வந்த அருண், வைஷ்ணவியை தேட அவளோ காய்கறிகளை வெட்டிக் கொண்டு இருந்தாள்.
" வைஷு " என்றபடி அவள் அருகில் வந்தவன்,
" என்னடி இங்க செய்ற? "
" இல்லடா, நீங்களும், உங்க அம்மாவும் மனசு விட்டு பேசிட்டு இருக்க செய்துவிட்டு நா சாப்பிட்டு விட்டு கொஞ்சம் சமையலுக்கு help பண்ணினேன் அவ்வளவு தான். அது சரி அம்மா மாத்திரை போட்டாங்களா? "
" சரி, சரி போதும், ஆமா, மருந்து குடித்துவிட்டு, அம்மா தூங்குறாங்க, பக்கத்து கட்டில் free ஆக தான் இருக்கு. நீ கொஞ்சம் rest எடுத்துக்கோ. புரிதா?? " என்று அக்கறையோடு அவன் சொல்ல,
" நீங்களும் 2நாளா தூங்கவே இல்லையே. Please கொஞ்சம் தூங்குங்களே" என்றாள் அவனின் கண்ணை பார்த்தபடி.

" சரிடி, நா தூங்குறேன். ஏதும் தேவையென்றால் பேசுடி" என்று அறைக்கு செல்லும் அவனை கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் வைஷ்ணவி.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now