💕 என்னவள் நீயே - 41 💕

1K 46 24
                                    


" sorry papa, உன்ன கஷ்டப்படுத்தினதுக்கு. எப்படி papa அமர்ந்து கொண்டு தூங்கின? "
" ஐயோ இதற்கெல்லாம் ஏன் sorry? எல்லாம் என் baby காக தானே செய்தேன். So கஷ்டமேதுமில்லை. சந்தோசத்தால் தான் உன்னை உறங்க வைத்து நானும் உறங்கினேன்." என்று சொல்லிவிட்டு, சமையலறையில் நுழைந்தவள், 5நிமிடங்களில் heater jug இல் இருந்த தண்ணீரும் கொதிக்கவே, tea ஊற்றி அன்று நேர காலத்துடன் எழுந்த அருணிற்கு கொடுக்க சென்றாள்.

" அம்மா, good morning. என்ன செய்றீங்க? எழுந்துவிட்டீங்களா? வேலையம்மாள் வேலைக்கு வந்து விட்டாவா?" என்று காலையிலே என்றுமில்லாதவாறு தாயுடன் தொலைபேசி பேச, வைஷ்ணவிக்கு அந்த கெட்ட கனவு அருணின் அம்மா பற்றிதான் என்று விளங்கியது. அருண் கண்ட கெட்ட கனவு பலித்துவிட கூடாது என்று மனதால் வேண்டிக் கொண்டாள்.

அவன் தாயுடன் பேசி முடிந்ததும்,
அருணை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றாள் வைஷ்ணவி.
அங்கே வானமும் அழகான நீல வண்ணத்தால் நிறமூட்டியும், பறவைகள் கூட்டங்கள் வானில் பறக்கவும் செய்தன. பச்சைபசேலென ஆங்காங்கே கட்டிடங்களுக்கு இடையில் அரிதாக விளங்கியது. அந்த அதிகாலையிலும் வாகனங்கள் வீதியில் ஹோன் சத்தத்துடன் ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தன.
" papa, என் phone charge ல போட்டுட்டு வந்து விட்டேன். கொஞ்சம் உன் phone யை கொஞ்சம் தா papa" என்று சொல்ல,
அவளது கையடக்க தொலைபேசியை அருணிற்கு கொடுத்தாள்.

"Pattern please"
V என்று அதில் கீற, homescreen உம் வந்தது.
அதில் அன்று அவன் presentation செய்து முடித்து, மற்றைய டாக்டர்களுடன் சிரித்து பேசும்போது எதிர்ச்சையாக எடுத்த அருணின் புகைப்படமே வைஷ்ணவியின் homescreen இல் போடப்பட்டு இருந்தது.
"இது எப்படி எடுத்த photo?"
" அன்று presentation நடந்தபோது" என்றபடி brightness யை கூடி side button ஆல் மீண்டும் phone யை lock செய்து காட்ட,
அன்று இளம்நீலநிற long sleeve shirt அணிந்து, presentation யை present செய்யும்போது எடுத்த புகைப்படமே அது.
" இதெல்லாம் என்னடி papa? " என்று இரக்கத்துடன் கேட்கவே,
" நீ என் பக்கத்து இல்லாத நேரத்தில் ஃபோன்ல உன்ன பார்த்தா நீ என் அருகில் இருப்பது போலவே இருக்கும். உன்னை பார்க்க முடியாத நேரத்தில் இதை பார்த்து திருப்திப்படுவேன். இதை கண்டால் நீ எனக்கானவன் என்று பெருமையும் எனக்குள் வரும்" என்றாள் வைஷ்ணவி.
" so sweet of you, papa " என்று அவளுடன் கூந்தலை தடவியபடி, அவனின் உதடுகள் சொல்ல, மூளையோ கனவை பற்றியே சிந்தித்துக் கொண்டு இருந்தது.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now