💕என்னவள் நீயே - 02 💕

3.3K 75 12
                                    


அன்றிரவு எல்லா வேலைகளுக்கும் அவர்கள் உதவி செய்துவிட்டு தத்தமது வீடுகளை நோக்கி சென்றனர்.
அடுத்த நாள் வைஷ்ணவியின் வீட்டில் பால் பொங்கவைத்து  அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

காலப்போக்கில்,
வைஷ்ணவியிற்கு அம்மாவின் வயதை ஒத்த மிகவும் இரக்கமான அம்மா போன்ற அம்மாள், அண்ணனை போன்று பாதுகாக்க ஓர் அண்ணன், தனக்கு அக்கா என்ற உறவு இருந்தால் இப்படி தான் என்று வியக்கவைக்கும் ஓர் அக்கா, நட்பு என்ற வரைவிலக்கணத்திற்கு நண்பர்களும் கிடைக்கப் பெற்றனர்.

வைத்தியசாலை பணியாலும், சுற்றியுள்ள ஆட்களினாலும் வைஷ்ணவியின் வாழ்க்கை ஒளி மயமானது. வார இறுதிநாட்களில் பணியில் விடுமுறை கிடைத்த எல்லாரும் சேர்ந்து கடற்கரை, சாப்பிங் மால் என்று நகரப்புறங்களுக்கும் சென்றனர்.

இவ்வாறு 6 மாதங்கள் பம்பரமாய் சுழன்றன.
ஸ்வேதாவால் வைஷ்ணவியின் எந்தவொரு குறைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
நோயாளிகளுடன் அவள் பழகும் முறையினால் பலரின் மனதையும் பாசக் கயிறால் கட்டியும் போட்டாள்.

அன்று,

இமெஜன்ஸி கேஸ்  ஒன்றை பார்த்து பலரும் பதற்றப்படவே, அம் முதியவருக்கு மைனர் ஹார்ட் அட்டெக் என்று ரீபோர்ட்டில் வர, சிகிச்சைகளும் நடைபெற்று நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டார்.
காலையுணவு, பகலுணவு இடைவேளை நேரத்தில் வைஷ்ணவி அவரை பார்ப்பதும் போவதுமாகவே இருந்தாள். நோயாளிகளை கவனித்துவிட்டு கிடைக்கும் சிறு 5, 10 நிமிடங்களுக்கும் அம் முதியவரை எட்டிப் பார்த்தாள். அன்று டே டூயூட்டி என்பதால் அன்று 6 மணிக்கு பின்னும் ஓப்ஃ ஆகாமல் அவருடனேயே வைத்தியசாலையில் இருக்கவே ஸ்வேதாவிற்கு புதிராக காணப்படவே,

மஹாவை அழைத்து ஸ்வேதாவின் நடவடிக்கைக்கு விவரம் கேட்கவே, அம் முதியவர் வைஷ்ணவியின் தந்தை என்று சொல்லப்பட்டது.
அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது என் அருகில் தான் வைஷ்ணவி இருந்தாள், மற்றைய நோயாளிகளை போலவே அவரையும் கவனித்து, மற்றைய நேரங்களில் மற்றைய நோயாளிகளுடன் தன் நேரத்தை இமெஜன்ஸி வார்ட்டில் செலவழித்து , ஓப்ஃ அவரை கவனிக்க சென்ற அவளை நினைக்கையில் மனம் கனிந்தது. ஒரு முடிவுடன் பெரிய வைத்தியரை சந்திக்க சென்றார் பெரிய தாதி ஸ்வேதா.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Donde viven las historias. Descúbrelo ahora