💕 என்னவள் நீயே - 18 💕

1.1K 43 3
                                    


அந்த பெரியாரும் call எடுத்து, அருணிடம் தன் மகனின் புத்தகங்களை கொடுக்க, நன்றியுடன் அவனும் வாங்கிக் கொண்டான்.

" இன்னும் 2 மாதங்கள் தான் Exam க்கு இருக்குதே. நானும் இப்போது சமைத்து ஹோட்டலிற்கு கொடுப்பதால் இனி நீ வேலைக்கு போக அவசியமில்லை அருண். தந்தையும் கடைசியாக என்னிடம் கேட்டுக் கொண்டது உன்னை நன்றாக படிக்க வைக்கவே. டியூஷன் வைக்க இனி போக தேவையில்லை. இனி நன்றாக படிடா. இறுதி பரீட்சை அல்லவா? தந்தைக்காக உனக்கு இது மட்டும் தான் செய்ய முடியும் " என்று இரவு தூங்கும் போது அருணிடம் கேட்டுக் கொண்டார் அவனின் தாய்.

" அம்மா சொல்வதும் சரிதான். இனி நூலகத்திற்கும் செல்ல தேவையில்லை. நாளை cafe இற்கு போய் சொல்லிவிட்டு விலக வேண்டும் " என்று உறுதியுடன் உறங்கிப் போனான்.

அன்று காலை,
Cafe இற்கு செல்ல, உரிமையாளர் இருந்தார். வேலையிலிருந்து விலக தன் படிப்பை காரணமாக தெரிவிக்க, அருணின் கனவிற்கு அவரும் ஆதரித்தார். முதலில் அருணிற்கு திட்டிய உரிமையாளருக்கும் அவனின் விலகல் பற்றி சொல்லவும் சற்றே கவலையை அளிக்க தான் செய்தது. போகப் போக அருணும் உரிமையாளருடன் நட்பாக இருந்து, வேலையாட்களை சிரிக்க வைத்து மன நிம்மதியை வேலையில் கொடுப்பவனும் ஆயிற்றே. உரிமையாளர் ஐயாவிடம்  "ஐயா, உங்கள் மகனை கேட்டதாக சொல்லுங்கள், வேறு ஒரு நாளைக்கு வந்து அவரை சந்திக்கிறேன்" என்று அங்கிருந்து விடைப்பெற்றான் அருண்.
Cafe இல் அப்போது இருந்த தின்பண்டங்களில் சிலவற்றை எல்லோரும் சேர்ந்து சந்தோசமாக கொடுத்தனுப்பி, "இந்த பக்கம் வந்தால் கட்டாயம் வாருங்கள் தம்பி, எங்களை மறந்து விட வேண்டாம்" என்றனர்.

அடுத்த நாள்,
காலையும் அழகாக மலர,
காலையில் எழுந்து, குளித்துவிட்டு, "வேலைக்கு தான் என்னை அனுப்பவில்லை. ஒரு மணிநேரமாவது உங்களுக்கு நான் உதவலாமே" என்று வற்புறுத்தி, தாயிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்தான் அருண். பின் தன் படிப்பில் கவனம் செலுத்தினான். கடைகளுக்கு உணவுகளை அவனே சென்று கொடுத்து வருவான். மாலை நேரத்திற்கு சென்று காசுகளை திரட்டி எடுத்து, வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி வந்து கொடுப்பான்.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now