💕 என்னவள் நீயே - 10 💕

1.6K 41 17
                                    


காலையும் அழகாக மலர, ஸ்னேஹா தன்னை தயார்படுத்திக் கொண்டு என்றும் இல்லாதவாறு உற்சாகமாக கல்லூரிக்கு செல்லலானாள்.
"hai, இன்று class இருக்கிறது தானே?" என்று ஒரு சாக்கை பயன்படுத்திக் கொண்டு கல்லூரி போகும் நேரத்தில் அருணிற்கு குறுஞ்செய்தியொன்றையும் அனுப்பி வைத்தாள்.
ஆனால் உடனே பதிலேதும் கிடைக்கவில்லை. ஒரு வேளை தந்தையோடு பிசியாக இருப்பானா இருக்கும் என்று மனதிடம் கூறி தேற்றினாலும் பேருந்து சத்தத்திற்கு message tone விளங்கவில்லையோ என்று பல தடவை கைப்பையில் கையையிட்டு கையடக்கத்தொலைபேசி எடுத்துப் பார்க்க ஏமாற்றமே அவளுக்கு மிஞ்சியது.

வகுப்பறையில் நுழைய,
" good morning, ஸ்னேஹா. என்ன இன்று ரொம்ப அழகாய் இருக்கிறாய்? New hairstyle எல்லாம் போட்டு Paaa" என்று சுசி சொல்ல,
" போடி போடி ஒரு அலங்காரமும் இல்லை. முடியை பின்னி கட்டியிருக்கிறேன். அவ்வளவு தான்" என்றதும்,
"நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே"
என்று சுசி பாடலானாள்.
இதன் வரிகளை கேட்ட ஸ்னேஹாவின் மனதில் இனம் தெரியாத உணர்வுகளும் வந்து போனது.

தந்தையை சிகிச்சைக்கு அனுமதித்து விட்டு யாருக்கோ அழைப்பு விடுக்க கையடக்க தொலைபேசியை எடுத்த அருண் புதிய இலக்கத்திலிருந்து ஓர் message. யாராக இருக்கலாம்? என்று எண்ணியபடி message open செய்து பார்க்க, கல்லூரியில் நடக்கும் extra class பற்றி கேட்க நான் யாருக்கும் என் தொலைபேசி இலக்கத்தை கொடுக்கவில்லையே. என்று யோசிக்கையில் தான் ஸ்னேஹாவின் நினைவு வந்தது.
அன்று மாலை அவள் அழைப்பு விடுத்தாலும்  வேலைப் பளுவால் இலக்கத்தை save பண்ண முடியாமல் போய்விட்டதே என்று யோசித்தபடி,
yes என்று ஒற்றை சொல்லாக பதில் அனுப்பி வைத்தான் அருண்.

Lunch break இல் ஸ்னேஹா கையடக்க தொலைபேசியை எடுத்து பார்க்க, அருணிடமிருந்து ஒரு message.
ஒற்றை பதிலை கண்டு அவளுக்கு கோபம் தலைக்கேறியது. இது நண்பியாக இருந்தால் நன்றாக கிழித்து ஏசி அனுப்பி இருப்பேன். ஆனால் அனுப்பியவர் அருணாயிற்றே.
அவ்வளவுக்கு என்னவாம் dear, or sneha என்று பின்னால் போட்டு இருக்கலாமே. கேட்ட கேள்விக்கு மட்டுமா பதில் சொல்ல வேண்டும்? இன்று வரட்டும் இரண்டு கேள்வி கேட்கிறேனே என்று உறுதி செய்தாள்.

💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed) Where stories live. Discover now